இந்தியாவில் புதிய ஐடி நிறுவனம்.. முதல் நாளே டெக் மஹிந்திரா அவுட்.. அடுத்து விப்ரோ..?

இந்திய ஐடி சேவை துறை பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கடுமையான போட்டிகளுக்கு இடையில் புதிய திட்டங்களை வெளிநாட்டு சந்தையில் இருந்து கைப்பற்றி வரும் நிலையில், புதிதாக ஒரு ஐடி நிறுவனம் மிகப்பெரிய கட்டமைப்புடன் உருவாகியுள்ளது.

இந்திய ஐடி சந்தையில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை டாப் 5 இடங்களில் இருக்கும் வேளையில் நடுத்தரப் பிரிவுகளில் இருந்து இரண்டு முன்னணி ஐடி சேவை நிறுவனமான L&T Infotech மற்றும் Mindtree ஆகியவை இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இதன் மூலம் இக்கூட்டணி நிறுவனமான LTIMindtree நாட்டின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான உருவெடுத்துள்ளது.

L&T Infotech மற்றும் Mindtree

L&T Infotech மற்றும் Mindtree


L&T Infotech மற்றும் Mindtree ஆகியவை இணைக்கப்படச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த இணைப்பைத் தொடர்ந்து Mindtree பங்குதாரர்களுக்கு L&T Infotech பங்குகள் கொடுக்கப்பட்டது.

பங்குகள்

பங்குகள்

அதாவது 100 Mindtree பங்குகளுக்கு 73 L&T Infotech கொடுக்கப்பட்டது. இதன் மூலம் Mindtree அனைத்தையும் L&T Infotech வாங்கிய நிலையில் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான L&T சுமார் 68.73 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது.

இணைப்பு - ஒப்புதல்

இணைப்பு - ஒப்புதல்

L&T Infotech மற்றும் Mindtree மத்தியிலான இணைப்பு மே மாதம் 2022ல் அறிவிக்கப்பட்டது, இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரு தரப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள், மும்பை மற்றும் பெங்களூரு NCLT அமைப்பு ஆகியவற்றிடம் ஒப்புதல் பெற்று இன்று அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டு LTIMindtree ஆக உருவெடுத்துள்ளது.

வாய்ப்புகள் அதிகம்

வாய்ப்புகள் அதிகம்

இவ்விரு நிறுவனங்கள் இணைப்பின் மூலம் இரு நிறுவனங்கள் தனித்தனி விஷயத்தில் சிறப்பு வாய்ந்தாக இருக்கும் நிலையில் தற்போது இணைந்து பல துறையில் பல பிரிவுகளில் சிறப்பான சேவை அளிக்க முடியும்.

 பில்லியன் டாலர் ப்ராஜெக்ட்

பில்லியன் டாலர் ப்ராஜெக்ட்

இதேபோல் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் போல் பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை எளிதாகப் பெற்று வேகமாகவும், திறம்பட முடிக்கப் போதிய தளமும், ஊழியர்களும் வாய்ப்புகளும் LTIMindtree-க்கு உருவாகியுள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இதேபோல் இவ்விரு நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும். இந்த அதிரடி வாய்ப்பில் 4வது இடத்தில் தடுமாறிக் கொண்டு இருக்கும் விப்ரோ-வை முந்தி LTIMindtree 4வது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

இந்த இணைப்பின் அறிவிப்பை தொடர்ந்து Mindtree பங்குகள் 2.61 சதவீதம் உயர்ந்து 3,760 ரூபாய்க்கும், L&T Infotech பங்குகள் 2.04 சதவீதம் அதிகரித்து 5,161 ரூபாய்க்கும் இன்றைய வர்த்தகத்தில் முடிவடைந்துள்ளது.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பீட்டின் படி L&T Infotech நிறுவனம் 90,520 கோடி ரூபாயாக உள்ளது, Mindtree நிறுவனம் 62,110 கோடி ரூபாயாக உள்ளது. இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்கள் இணைத்த பின்பு அதாவது LTIMindtree மதிப்பு 1,50,000 கோடி ரூபாய் அளவீட்டை தாண்டும். இதனால் டெக் மஹிந்திராவை எளிதாகத் தாண்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+