ஐடி ஊழியர்கள் மற்றும் டெக் நிபுணர்களுக்கு இது போறாத காலம் என கூறலாம். ஏனெனில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தினம் தோறும் ஊழியர்கள் பணி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அமேசான், கூகுள்,டிசிஎஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை இந்த ஆண்டில் பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன .
டெக் நிறுவனங்களின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் இருப்பது இரண்டு விஷயங்கள் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை . ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய அன்றாட வேலைகளில் நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதன் காரணமாக அந்த வேலைகளில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்ததாக ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

இதனால் ஐடி ஊழியர்களை பொறுத்தவரை தற்போது அவர்களின் தலையின் மேல் பெரிய கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது . எந்த நேரம் வேண்டுமானாலும் பணிநீக்கம் என்ற மின்னஞ்சல் அவர்களுக்கு வரலாம். இந்த சூழலில் இப்படி ஏற்கனவே அச்சத்தில் இருக்கக்கூடிய ஐடி ஊழியர்களுக்கு எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான எல்டிஐ மைண்ட் ட்ரீ , 1500 டிஜிட்டல் ஊழியர்களை களத்தில் இறக்கி இருக்கிறது . ஏஐ தான் இந்த டிஜிட்டல் ஊழியர்கள். தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை, நிதித்துறை மற்றும் உள்கட்டமைப்பு செயல்பாடு ஆகிய பிரிவுகளில் 1500 டிஜிட்டல் ஊழியர்களை எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் புதிதாக பணிக்கு அமர்த்தி இருக்கிறது .
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வேணு லம்பு அளித்துள்ள பேட்டியில், ஏஐ ஏஜெண்டுகள் தான் எங்களின் டிஜிட்டல் ஊழியர்கள் என கூறியுள்ளார். இந்த ஏஐ ஏஜேண்டுகளுக்கு வழக்கமான ஊழியர்களை போலவே எம்பிளாயி ஐடி, டிஜிட்டல் புரோஃபல் ஆகியவை இருக்கும். இந்த ஏஐ டிஜிட்டல் ஊழியர்களுக்கு மனிதர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.
ஏஐ ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிப்பது, அது செய்யும் வேலைகளை மேற்பார்வை இடுவது உள்ளிட்டவற்றை ஊழியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த ஏஜென்ட்கள் சரியாக வேலை செய்யவில்லை, சொல்லிக் கொடுப்பதை சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்றால் மனிதர்களை போலவே ஏஜ டிஜிட்டல் ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குவோம் என வேணு தெரிவித்துள்ளார்.
தங்கள் நிறுவனம் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தாமலே 2026 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கூடுதலாக 64 மில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம் ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை எனக் கூறியிருக்கிறார் .
ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் ஒரு புதிய கிளைண்டுகளை கொண்டு வருவது, அவர்களுக்கான ப்ராஜெக்ட் செயலாக்கம் செய்வது , கணக்கு பார்ப்பது உள்ளிட்ட அனைத்தையும் ஏஐ ஏஜெண்டுகள் பார்த்து கொள்வதாகவும் மனித ஊழியர்கள் அவற்றை மேற்பார்வை இடுகிறார்கள் என கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் தனக்காகவே ஏஐ ஏஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளதாக வேணு தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications