இந்தியாவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என கூறிவரும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான எல்டிஐமைண்ட்ரீ (LTIMindtree) ஹைபிரிட் பணி நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. எல்டிஐமைண்ட்ரீ நிறுவனத்தில் துணைநிலை ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் அலுவலகத்தில் வந்து பணி புரிய வேண்டும் மற்ற நாட்கள் அவர்கள் விரும்பிய இடத்திலிருந்து பணிபுரியலாம்.
அதேபோல மேலாண்மை மற்றும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்தும் மற்ற நாட்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் இருந்தும் பணி புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் முறையை மாற்ற போவதில்லை என இந்த நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான நச்சிகேட் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி தந்த விட்டு தற்போது கட்டாயம் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. ஆனால் எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை அத்தகைய மாற்றங்கள் எதுவும் கிடையாது என கூறியுள்ளார்.
மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். தங்களுடைய ஊழியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அலுவலக வாழ்க்கையில் சமநிலை காண வேண்டும் என என்பதே எங்களது விருப்பம் எனக் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் துணை நிலைகளில் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களும் மேலாண்மை மற்றும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்களும் அலுவலகத்திற்கு வந்து பணி புரிந்தால் போதும் மற்றபடி அனைவரும் அவர்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரிவது விரும்புவதையும் நாங்கள் கவனித்து வருகிறோம் என தேஷ்பாண்டே கூறியுள்ளார். சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பணியாற்ற அனுமதி தந்தன. கொரோனா தொற்று முடிவடைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
பெரும்பாலான ஊழியர்கள் அதற்கு செவி சாய்க்க மறுக்கின்றனர். பலரும் ஹைபிரிட் முறை அதாவது குறிப்பிட்ட நாட்கள் அலுவலகத்திலும் குறிப்பிட்ட நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறைக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் சர்வதேச அளவில் அமேசானில் தொடங்கி இந்தியாவில் டிசிஎஸ் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளன. இதனை ஏற்க மறுப்பவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் தவிர்க்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications