இந்திய ஐடி துறை டாட் காம் பபுள் வெடிப்பு, 2008 சர்வதேச நிதி நெருக்கடிக்கு பின்பு மிகவும் மோசமான வர்த்தக சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரையில் எந்தொரு நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாமல் இருப்பது நல்ல விஷயமாக இருந்தாலும், சம்பள உயர்வு கட், வேரியபிள் பே குறைப்பு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மந்த நிலை என பல பிரச்சனைகள் உள்ளது.
இந்த நிலையில் இந்திய ஐடி சேவை துறையில் 5வது பெரிய நிறுவனமான உருவெடுத்துள்ள LTIMindtree பல ஊழியர்களுக்கு மோசமாக வர்த்தக சூழ்நிலையை காரணம் காட்டி சம்பள உயர்வை ரத்த செய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு நடப்பு நிதியாண்டில் அளிக்கப்படும் இதில் பலருக்கு 0 சதவீத சம்பள உயர்வை கொடுத்துள்ளது LTIMindtree நிறுவனம்.

LTIMindtree நிறுவனத்தில் சில பல ஊழியர்கள் 1-2 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை கூட பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, நாட்டின் பணவீக்கமே 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் வேளையில் 0 சதவீதம், 1-2 சதவீத சம்பள உயர்வை ஐடி ஊழியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.
இந்த மோசமான வர்த்தக சூழ்நிலைக்கு காரணமாக இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கம், உலக நாடுகளில் அதிகரித்து வந்த ரெசிஷன் அச்சம், அமெரிக்க வங்கிளின் அடுத்தடுத்த திவால், கார்பரேட் நிறுவனங்கள் புதிய செலவுகளை குறைத்தது, பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் GCC துவங்க முடிவு செய்தது என பல விஷயங்கள் சேர்த்து இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது.
LTIMindtree நிறுவனத்தில் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் சம்பள உயர்வு அளிப்பது வழக்கம், ஆனால் கிட்டத்தட்ட 4 மாதங்கள் காத்திருந்தும் பலருக்கு 0 சதவீத சம்பள உயர்வு என்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் இன்போசிஸ் நிறுவனத்திலும் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை, இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திராவில் வேரியபிள் பே குறைக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications