LTI மற்றும் Mindtree இணைந்தது மூலம் இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ள LTIMindrtree புதன்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மொத்த லாப அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 2 சதவீதம் சரிந்துள்ளது.
LTIMindrtree 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 1188 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், தற்போது 1162 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக பெற்றுள்ளது. ஆனால் சந்தை கணிப்பில் LTIMindrtree 1120 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், 1188 கோடி ரூபாயை பெற்றுள்ளது.

இதே காலக்கட்டத்தில் LTIMindrtree நிறுவனத்தின் வருவாய் சுமார் 8 சதவீதம் அதிகரித்து 8905 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இதன் அளவு 8228 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லாபத்தில் 2 சதவீத சரிவை பதிவு செய்த நிலையில் முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த ஒரு பங்கிற்கு 20 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
டாலர் மதிப்பீட்டில் LTIMindrtree நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 1.07 பில்லியன் டாலர் வருவாயை பெற்று வருடாந்திர அடிப்படையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இக்காலக்கட்டத்தில் EBIT அளவு 1 சதவீதம் சரிந்து 1,423 கோடி ரூபாயாகவும், மார்ஜின் அளவு 16 சதவீதம் கொண்டு உள்ளது.
LTIMindrtree செப்டம்பர் காலாண்டு முடிவில் 737 ஆக்டிவ் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. இக்காலாண்டில் சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. மேலும் இக்காலாண்டு முடிவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 83,532 ஆக உள்ளது.
LTIMindrtree நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதானது அட்ரிஷன் விகிதம் 15.2 சதவீதமாக உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் LTIMindrtree நிறுவன பங்குகள் 0.82 சதவீதம் சரிந்து 5172 ரூபாயாக முடிந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications