முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பலருடைய வெற்றி கதைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் ஒருவரின் கதையைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். ஆம் காமினி சிங் என்ற பெண்மணி ஒரு புதுமையான அணுகுமுறையைப் பயன்படுத்தி முருங்கை மரத்தை மட்டுமே பிரத்தியேகமாகக் கொண்டு பல விஷயங்களை செய்து வருகிறார். இதன் மூலம் லட்சங்களில் வருமானமும் ஈட்டி வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
காமினி சிங் 2019-ஆம் ஆண்டில் "டாக்டர் மோரிங்கா" என்ற பிராண்டை உருவாக்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைத் தளமாகக் கொண்ட டாக்டர் மோரிங்கா என்ற நிறுவனத்தில் முருங்கை இலைகளை வைத்து பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காமினி சிங் முருங்கை இலைகளை வைத்து கேப்சூல்கள், முருங்கை பொடி, ஹேர் ஆயில் மற்றும் முருங்கையைக் கொண்டு பிற பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளார்.

தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தப்பிறகு லக்னோவில் உள்ள தோட்டக்கலை நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார் காமினி சிங். 2008-ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதிலிருந்து சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு அதன் பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது டாக்டர் பட்டத்தை படிக்க தொடங்கினார்.
2015-ஆம் ஆண்டில் காமினி சிங் தனது டாக்டர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தான் பணியாற்றிய நிறுவனத்தில் வேலையை விட்டார். அதிலிருந்து சுயமாக ஒரு விவசாயியாக மாற முடிவு செய்தார். அதன் பின்னர் ரூ.9 லட்சம் தனிநபர் கடன் பெற்று இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தீங்கு விளைவிக்கும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் சில விஷயங்களை செய்ய முடிவு செய்தார்.
எனவே காமினி சிங் வயல்களுக்கு சென்று விவசாயிகளுடன் நீண்ட உரையாடல்களை நடத்தி வயல்களின் ஓரங்களில் மட்டும் முருங்கை மரத்தை வளர்க்கச் சொன்னார். அதற்கு பல விவசாயிகளும் ஒப்புக்கொண்டனர். விவசாயத்தை தொடங்க விதைகளையும் அவரே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார்.
வயல்களுக்கு ஓரத்தில் முருங்கை மரம் நடுவதால் எந்த வித ஆபத்தும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட விவசாயிகளும் காமினி சிங் சொன்னபடி நடக்கத் தொடங்கினர். அதோடு முருங்கை அறுவடை செய்யும் முழு செயல்முறையையும் காமினி அனைத்து விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்தார். பிறகு 2018 வாக்கில் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் முருங்கை வளர்க்க 10 விவசாயிகளை பணியமர்த்தினார்.
2019-ஆம் ஆண்டில் டாக்டர் மோரிங்கா என்ற ஆரோக்கிய பிராண்டை உருவாக்கினார். இதன் மூலம் முருங்கை வளர்ப்பதற்கு,ம் முருங்கை சார்ந்த தயாரிப்புகளை வழங்குவதற்கும் பிரத்தியேக முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார், அதோடு லக்னோவின் பல பகுதிகளில் ஸ்டால்களை அமைத்து இது போன்ற சூப்பர் ஃபுட்டின் நன்மைகளை எடுத்துரைக்க தொடங்கினார். இவருடைய விடாமுயற்சி பல்வேறு உயரங்களை தொட ஆரம்பித்தது. பிரதமர் மோடியும் இதை உட்கொள்கிறார் என்று தெரிந்ததும் மக்கள் ஆர்வத்துடன் டாக்டர் மோரிங்கா பிராண்ட்டின் பொருட்களை வாங்க தொடங்கினர்.
இன்று, டாக்டர் மோரிங்கா, முருங்கை காப்ஸ்யூல்கள், மாத்திரைகள், பவுடர், சோப்புகள், ஷாம்புகள், எண்ணெய்கள், வலி நிவாரணி எண்ணெய்கள் மற்றும் தேநீர் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த தயாரிப்புகள் மூட்டுவலி வலி, ஊட்டச்சத்து குறைபாடு, முகப்பரு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை சமாளிப்பது போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து தான் வழங்கிய முருங்கை விதையிலிருந்து கிடைக்கும் முருங்கை இலைகளை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இன்று இந்நிறுவனத்தில் 10 பெண் உதவியாளர்கள் பணி புரிகின்றனர். அதோடு 22-க்கும் மேற்பட்ட விற்பனை பெண்கள் பணிபுரிகின்றனர். 2019 ஆம் ஆண்டில் டாக்டர் மோரிங்கா தொடங்கப்பட்டபோது ஆண்டு வருவாயாக இந்நிறுவனம் ரூ.19 லட்சம் வருவாய் ஈட்டியது.
2024-ஆம் தேதியாண்டில் ஆண்டு வருவாய் ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. எனவே 2025-ஆம் நிதி ஆண்டில் தனது நிறுவனத்தின் வருவாயை ரூ.2 கோடியுடன் முடிக்க காமினி சிங் இலக்கு வைத்துள்ளார். தற்போது புது முயற்சியாக முருங்கை கலந்த குழந்தைகள் உணவு மற்றும் சாக்லேட்டுகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications