ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் கார்களுக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் ஜெர்மனியில் இருக்கும் 3 கார் தொழிற்சாலைகளை மூடிவிட்டு, 20000 அதிகமான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் பிரபலமான விமான போக்குவரத்து நிறுவனமான லுஃப்தான்சா, அதன் நிர்வாகப் பணியாளர்களை சுமார் 20 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்களுக்கும், ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

லுஃப்தான்சா நிறுவனத்தின் நிதி இழப்புகளைக் குறைக்கவே இந்த பணிநீக்கம் அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 400 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம். இந்த பணிநீக்கம் விமான சேவையில் அதிகப்படியான ஆட்டோமேஷன் சேவைகள் கொண்டு வருவதன் வாயிலாகவும், பணியாளர் மாற்றம் வாயிலாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது லுஃப்தான்சா.
லுஃப்தான்சா தனது வர்த்தகத்தை தற்போதைய கட்டமைப்பிலேயே தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் லுஃப்தான்சா 800 மில்லியன் யூரோ ஆப்ரேட்டிங் இழப்பை சந்திக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்பாடே தற்போதைய பணிநீக்கம்.
லுஃப்தான்சா விமான நிறுவனம் குறைந்த லாபம், சர்வதேச விமான நிறுவனங்களின் போட்டி மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் போன்ற சவால்களை கடந்த சில வருடங்களாக எதிர்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் லுஃப்தான்சாவின் இயக்க லாபம் 9% குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications