டெல்லி: எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரித்து உலகெங்கிலும் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்கா, சீனா என உலக சந்தையில் ப்ரீமியம் மின்சார கார்கள் என்றாலே டெஸ்லா தான் என்ற நிலை இருந்தது.
எப்போது எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார்கள் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்களை காணலாம் என பலரும் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்கிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க், மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பை அடுத்து எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. எந்த மாடல் கார்கள் இந்தியாவுக்கு வருகிறது அதன் விலை என்ன என சமூக வலைதளங்கள் முழுவதும் டெஸ்லா கார்கள் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது . இந்நிலையில் ஜூலையில் மும்பையில் முதல் தன்னுடைய முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் தொடங்கியது. இதனை அடுத்து டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறந்திருக்கிறது.
இந்தியாவில் டெஸ்லாவுக்கு சொந்தமான Model Y மின்சார கார்கள் முதலில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 58.89 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது. பலரும் டெஸ்லா , டெஸ்லா என துள்ளி குதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கான முன்பதிவு காத்து வாங்குவது தெரிய வந்திருக்கிறது.
இதுவரை இந்தியாவில் 600 பேர் மட்டுமே டெஸ்லாவின் Model Y கார்களுக்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் டெஸ்லா நிறுவனம் உலகம் முழுவதும் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் 600 கார்களை டெலிவரி செய்திருக்கிறது . ஆனால் இந்தியாவில் இதுநாள் வரை 600 கார்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் எந்த அளவிற்கு ஒரு மோசமான மோசமான வரவேற்பு இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
இது டெஸ்லா நிறுவனம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகும் . இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரவேற்பு குறைவாக இருப்பது அந்த நிறுவனம் இந்திய சந்தையை பிடித்து விடுமா என்று எழுந்த விவாதங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. முன்பதிவு குறைந்ததால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்ய இருந்த கார்களின் எண்ணிக்கையும் குறைத்து இருக்கிறதாம். முதல் கட்டமாக 350 இல் இருந்து 500 கார்களை மட்டுமே இந்தியாவில் இந்த ஆண்டு இறக்குமதி செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறதாம்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய Model Y கார்கள் ஷாங்காயில் இருந்து இந்த மாதத்திலேயே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும். முதல் கட்டமாக இந்த கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகுராம் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications