லுலு குழுமத்தின் தலைவரான எம்.ஏ.யூசுப் அலி தனது எளிமையான குணத்திற்காக பெயர் போனவர். எவ்வளவு கோடிஸ்வரராக இருந்தாலும்.. அதை துளியும் வெளியில் காட்டாமல் தனது பண்பான குணத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டவர் இவர். தற்போது இவர் செய்த செயல் மீண்டும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்டென்ட் கிரியேட்டரான எஃபின் என்பவருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேடோ வாட்சை யூசுப் அலி பரிசாக வழங்கியுள்ளார். அதை அந்த கிரியேட்டர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜூலை 2024-ஆம் ஆண்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கமான "chronograph_2022"-இல் 544000-த்திற்க்கும் அதிகமான பாலோவர்ஸ்களையும், தனது யூடியூப் சேனலான "Chronograph by Effin M" என்பதில் 3,59,000-த்ற்க்கும் அதிகமான சந்தாதாரர்களையும் கொண்ட எஃபின், லுலு குரூப் தலைவரை சந்திப்பது என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். பின்பு ஒரு நேர்காணலில், யூசுப் அலி தனது தாயை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றி பேசி இருந்தார். இதை மனதில் வைத்து, எஃபின்.. யூசுப் அலியின் தாயின் படத்துடன் கூடிய ஒரு கடிகாரத்தை தயார் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு யூசுப் அலி தான் கேரளாவிற்கு வந்தபோது எஃபினை ஆச்சரியப்படுத்தியுள்ளார். யூசுப் அலி எஃபினைச் சந்திக்க நேரம் ஒதுக்கி அவரது ஆசையை நிறைவேற்றியது மட்டுமின்றி அந்த ரசிகருக்கு 2 லட்சம் மதிப்புள்ள ரேடோ வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து எஃபின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"ஆச்சரியமாக இருக்கிறது யூசுப் அலி" சார் என்று தனது ரீலுக்கு கேப்ஷன் எழுதியுள்ளார் எஃபின். வீடியோவில் யூசுப் அலி அந்த ரூமில் உள்ள மற்றவர்களுக்கு எஃபிணை அறிமுகப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இவர் கடிகாரங்களுக்கான முக்கிய நபர் என்று மலையாளத்தில் கூறி ரூ.2 லட்ச ரூபாய் மதிப்புள்ள ராடோ கடிகாரத்தை யூசுப் அலி வழங்குகிறார்.
அதற்கு எஃபின் தான் அன்பினால் யூசுப் அலி தாயின் உருவத்தைக் கொண்ட கடிகாரத்தை பரிசாக கொடுத்ததாகவும்.. பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு யூசுப் அலி.. அதேபோல அன்பினால் நான் இதை உங்களுக்கு தருகிறேன் என்று கூறுவதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது.
மேலும் பகிரப்பட்ட வீடியோவில் அலி எஃபினுக்கு பரிசளிக்கும் கடிகாரத்தை சுட்டிக்காட்டி, "இது எந்த பிராண்ட்?" என்று கேட்கிறார். அதற்கு எஃபினும் இது மிகப்பெரிய பிராண்டான ரேடோ என்று பதில் அளிக்கிறார். யூசுப் அலி பரிசளித்த வாட்ச்சில் அவருடைய வர்த்தக முத்திரையான "Y" என்ற லோகோ இடம்பெற்றுள்ளதையும் பார்க்க முடிகிறது.
யூசுப் அலி லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இது பல இந்திய நகரங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 256 ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மால்களைக் கொண்டுள்ளது. அவரது நிகர மதிப்பு, ஃபோர்ப்ஸ் படி, $8.9 பில்லியன் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications