உலக நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய முதலீடு மற்றும் வர்த்தக சந்தையாக மாறியுள்ளது. இந்த நிலையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலும், நேரடியாக வர்த்தக சந்தையிலும் முதலீடு செய்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற யூசப் அலி மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் கேரளாவில் ஏற்கனவே பல ஷாப்பிங் மால்களை கட்டியிருக்கும் வேளையில், கடந்த 2 வருடத்தில் பெங்களூர், கோயம்புத்தூர், அடுத்தது சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தது மால்களை லூலூ குரூப் திறந்து வருகிறது.

யூசப் அலி இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும் ஐக்கிய அரபு நாட்டில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளின் லூலூ குரூப் அடுத்த 3 வருடத்தில் புதிதாக 10000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட மால் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் லூலூ குருப் இதுவரையில் 20000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், இப்புதிய அறிவிப்பு மூலம் புதிதாக 10000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது எம்ஏ யூசப் அலி தலைமையிலான நிர்வாகம்.
லூலூ குரூப் தெலுங்கானா, அகமதாபாத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என லூலூ குரூப் நம்புகிறது.
இதேவேளையில் லூலூ குரூப் இந்தியாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது இதன் மூலம் சுமார் 22,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் எம்ஏ யூசப் அலி தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 5 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டு உள்ள மாபெரும் லூலூ மால் திறக்கப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியா - ஐக்கிய அரபு நாடுகள் மத்தியிலான ஏற்றுமதியை மேம்படுத்த, இந்தியாவில் அமைக்கப்பட உள்ள ஏற்றுமதிக்கான meat processing plant-ன் கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது.
மேலும் லூலு குரூப் அடுத்த 5 வருடத்தில் 3500 கோடி ரூபாய் அளவிலான தொகையை தெலுங்கானாவில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் ஷாப்பிங் மால் கட்டுமானத்திற்கு மட்டுமே 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது லூலூ குரூப்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications