விசாகப்பட்டினம்:இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் புகழ்பெற்று விளங்கும் ரீடைல் நிறுவனமான லூலு குழுமம் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. லூலு குழுமத்தின் தலைவரான எம்ஏ யூசுப் அலி, ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் லூலு குழுமம் முதலீடு செய்வது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து லூலு குழும தலைவரான யூசுப் அலி முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவிடம் கலந்தாலோசித்தார். உண்டாவல்லி பகுதியில் உள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு லூலு குழுமம் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது விசாகப்பட்டினம் பகுதியில் ஒரு லூலு மால் அமைப்பது குறித்தும், விஜயவாடா மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் ஹைப்பர் மார்க்கெட்டை நிறுவுவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மேலும் லூலு குழுமம் ஆந்திராவில் உள்ள ஃபுட் பிராசசிங் தொழில்களில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
சந்திராபாபு நாயுடு லூலு குழுமம் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற லூலு குழுமத்தின் ஆர்வத்தை பாராட்டுவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கொள்கைகளை கொண்டு வர இருப்பது குறித்தும் லூலு குழும தலைவரிடம் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது லூலு குழுமம் விசாகப்பட்டினத்தில் முதலீடு செய்வது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக லூலு குழுமம் முதலீட்டை தவிர்த்தது. தற்போது மீண்டும் சந்திர பாபு ஆட்சியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளார் யூசப் அலி.
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமை இடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் ரீடெய்ல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 1995 ஆம் ஆண்டு எம்ஏ யூசுப் அலி என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
தற்போது லூலு குழுமத்திற்கு சொந்தமாக ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 259 ஷாப்பிங் மையங்கள் இருக்கின்றன. மேலும் இந்தியாவில் இந்த நிறுவனம் ஐந்து இடங்களில் தங்களுடைய மால்களை நிறுவியுள்ளது உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய முதல் 50 ரீடெய்ல் நிறுவனங்களில் லூலுவும் ஒன்று.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications