கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு குடிபெயர்ந்த எம்.ஏ.யூசப் அலி மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்போது இந்தியாவில் கேரளா-வை தாண்டி பிற மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்து வருகிறது லூலூ குரூப்.
சமீபத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 2வது பெரிய தொழில்நகரமாக உருவாகி வரும கோயம்புத்தூரில் லூலூ மால் திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் மக்கள் லூலூ மால் திறப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி அதிகப்படியான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தினமும் சராசரியாக 10000 வாடிக்கையாளர்களை ஈரத்து வருகிறது.

இந்த மாபெரும் வெற்றியால் உடன் லூலூ குரூப் தனது அடுத்த மால்-ஐ ஹைதராபாத்தில் திறக்க உள்ளது. பெங்களூர், கோவை-யின் வெற்றியை தொடர்ந்து ஹைதராபாத் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விஷயமாக லூலூ மால் உள்ளது. ஹைதராபாத்தில் இதன் பிரமாண்ட திறப்பு விழா செப்டம்பர் 27 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் லூலூ மாலாக இருப்பதால் இளம் தலைமுறையினர் முதல் குடும்பங்கள் வரையில் ஷாப்பிங் செய்ய புதிய இடம் கிடைத்துள்ளதில் கொண்டாட்டமாக உள்ளனர். ஹைதராபாத்தில் வேகமாக வளரும் பகுதியான குகட்பல்லியில் இந்த மெகா ஷாப்பிங் மால் அமைந்துள்ளது, இந்த மால் 500000 சதுர அடியில் பரப்பளவில் சுமார் 200000 சதுர அடியில் லுலு ஹைப்பர் மார்க்கெட் மட்டும் அமைந்துள்ளது.
கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத் 6வது நகரமாக லூலூ மால் இந்தியாவில் துவங்கப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் புதிய லுலு மால் விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் லுலு மால் திறப்பு விழாவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று லூலூ குழுமம் தனது லிங்க்ட்இன் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி தெலுங்கானாவில் மால் அமைக்கப்படுவதை அறிவித்தார்.
தெலுங்கானாவில் நாங்கள் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறோம். ஹைதராபாத்தில் லுலு ஷாப்பிங் மால் மற்றும் ஹைப்பர் மார்க்கெட் திறக்கவுள்ளோம். இந்த மால் மூலம் குறைந்தது 2000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை தொடர்ந்து சுமார் ரூ.2500 கோடி முதலீட்டில் ஹைதராபாத்தில் மற்றொரு இடத்திலும் மால் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
புதிய லுலு மால் குறித்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு டாவோஸ்-ல் நடந்த உலகப் பொருளாதார கூட்டத்தில் தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் சென்ற போது தெலுங்கானா அரசாங்கத்துடன் லூலூ குரூப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மூலம் லூலூ குரூப்-ன் தெலுங்கான இதை துவங்கியது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications