மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய ஹைபர் மார்க்கெட் கடைகளில் ஒன்றான லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் திங்கள்கிழமை அன்று IPO வெளியிட்டது. இது இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய IPO-ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற 6 நாடுகளில் 240-க்கும் மேற்பட்ட கடைகளை லூலூ நிறுவனம் நடத்தி வருகிறது.
லூலூ குரூப் இன்டர்நேஷனல் வளைகுடா நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. எனவே இந்த IPO மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா கேரளா ஆகிய இடங்களிலும் ஏற்கனவே லூலூ மால் உள்ளது.

அக்டோபர் 28 முதல் நவம்பர் 5 வரை இயங்கும் இந்த பட்டியல், 2.582 பில்லியனுக்கும் அதிகமான பங்குகளை வழங்கவுள்ளது. நவம்பர் 14 அன்று அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் தொடங்கும் என்று லூலூவின் IPO ஆவணம் தெரிவிக்கிறது. இந்த IPO மூலம் லூலூ நிறுவனம் 1.7 பில்லியன் முதல் 1.8 பில்லியன் டாலர்கள் வரை திரட்டும் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து லூலூ நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்திய தொழிலதிபர் யூசுப் அலி 1974-ஆம் ஆண்டில் லூலூ நிறுவனத்தை நிறுவினார், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஸ்பின்னீஸ் மற்றும் சவூதி அரேபியாவின் பிண்டாவூட் ஹோல்டிங் போன்ற பிற கிராசரி நிறுவனங்களும் IPO வெளியிட்டுள்ளது. தற்போது இதில் லூலூ குழுமமும் இணைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி 1990-ஆம் ஆண்டில் முதன்முதலாக தனது முதல் கடையைத் திறந்தார். அதன் பிறகு லூலூ குரூப் ரியல் எஸ்டேட், ஷிப்பிங் எனப் பல்வேறு துறைகளிலும் இயங்க ஆரம்பித்தது.
"லூலூ தொடர்ந்து உலகின் ஷாப்பிங் மையமாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று லூலூவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபீ ருபாவாலா IPO ஆவணத்தில் கூறியுள்ளார்.
லூலூ குழுமம் சுமார் 70,000-த்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது. அமெரிக்கா, ஆசியா, வளைகுடா நாடுகள் என 46-க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications