சென்னை: லக்சம்பர்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய சர்வதேச அளவிலான சேட்டிலைட் நிறுவனம் சென்னையில் தன்னுடைய ஜிசிசி மையத்தை அமைத்து முதன்முறையாக இந்தியாவிலும் கால் பதிந்துள்ளது.
சர்வதேச அளவிலான சேட்டிலைட் அடிப்படையிலான கன்டென்ட் மற்றும் கனெக்டிவிட்டி தீர்வுகளை வழங்கக்கூடிய எஸ்ஈஎஸ் (SES) நிறுவனம் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் (DLF IT park) தன்னுடைய ஜிசிசி மையத்தை அமைத்திருக்கிறது. இதன் மூலம் முதன்முறையாக இந்த நிறுவனம் இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த gcc மையம் மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போதைக்கு முதல் கட்டமாக இந்த நிறுவனத்தில் 200 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 150 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பொது பொறியியல் அலுவலகமாகவும் பல்வேறு ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கூடிய அலுவலகமாகவும் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் அமைந்திருக்கக்கூடிய இந்த ஜிசிசி மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசிசி மைய திறப்பு விழாவில் தமிழ்நாடு ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். லக்சம்பர்க் நாட்டின் தூதர், எஸ்ஈஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஈஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லக்சம்பர்க் இல்லாமல் வேறொரு நாட்டில் எங்களுடைய திறன் மேம்பாட்டு கிளையை அமைக்க வேண்டும் என யோசனை வந்த போது முதலில் எங்கள் மனதில் தோன்றிய நாடு இந்தியா தான் என தெரிவித்துள்ளார் . இந்தியாவில் நாங்கள் பல்வேறு நகரங்களிலும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தோம் அப்பொழுது சென்னை திறமையான ஊழியர்களையும் உள்கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதை அறிந்து இங்கே எங்களுடைய ஜிசிசி மையத்தை நிறுவி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் தொடங்க சாதகமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டை போல எந்த பெரிய மாநிலத்தாலும் திறமையான மனித வளத்தை உருவாக்க முடியவில்லை எனக் கூறினார் . எஸ்ஈஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். விமான போக்குவரத்து மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவுகளுக்கு தேவையான பல்வேறு சேட்டிலைட் சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து எஸ்ஈஎஸ் நிறுவனம் ஏற்கனவே சேட்டிலைட் டிவி மற்றும் இ பேங்கிங் , டெலி மெடிசன் சேவைகளை வழங்கி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications