உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற அரச குடும்பங்களில் சில இந்தியாவில் குடி கொண்டுள்ளது. நமது பண்டைய கலாசாரம், நேர்த்தியான கலைகள், நுட்பமான ஜவுளிகள், சிறந்த வாசனை திரவியங்கள், பெருமைக்குரிய பாரம்பரியம் ஆகியவற்றுடன், இந்தியா அதன் வளமைக்கும் செழுமைக்கும் புகழ்பெற்றது. நமது அரச பரம்பரைகளின் வெற்றிகள், அவர்கள் வளர்த்த கட்டடக்கலை அற்புதங்கள், ஆடம்பரங்கள் இப்போதும் உலகம் முழுவதும் பேசப்படுகின்றன.
1971 இல் மத்திய அரசு மன்னர் பட்டங்களை ஒழித்த பிறகு இந்தியாவில் அரசர்கள் மற்றும் அரச குடும்பங்களின் ஆட்சிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் இன்றும், சில அரச குடும்பங்கள் தங்களுடைய பாரம்பரியத்தை நிலை நாட்டுவது மட்டும் அல்லாமல் ஆடம்பரத்திலும் மூழ்கியுள்ளது.

மேவார் பேரரசு: இந்தியாவின் பழமையான அரசு குடும்பத்தைச் சேர்ந்தது மேவார் பேரரசு. மன்னர் மஹாராணா பிரதாப்பின் வழித்தோன்றலாக இதை மேவார் பேரரசர்கள் ஆண்டு வந்தனர். 76ஆவது வாரிசான ஸ்ரீஜி அரவிந்த் சிங் மேவார் இந்த அரச குடும்ப மரபை இப்போது போற்றி வருகிறார்.
ஹச்ஆர்ஹெச் குரூப் ஆப் ஹோட்டல்களின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் பாரம்பரியமிக்க அரண்மனை ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் செயல்படுகின்றன.
உடையார் பேரரசு: இந்தியாவில் பணக்கார அரசக் குடும்பங்களில் உடையார் அரச வாரிசுகள் முதன்மையாக விளங்குகின்றனர். 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீகந்ததத்தா உடையார் மறைவைத் தொடர்ந்து ராஜமாதா, யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்சாஜ் உடையாரை மகனாக தத்தெடுத்து பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
யதுவீர் கிருஷ்ணதத்தாவின் சித்தப்பா தான் ஸ்ரீகந்ததத்தா உடையார். அவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி. யதுவீரும் அவரது குடும்பத்தாரும் மைசூரு அரண்மனையில் இப்போது வசிக்கின்றனர். அத்துடன் உலகப் புகழ்பெற்ற பட்டு பிராண்டான தி ராயல் சில்க் ஆப் மைசூருவின் உரிமையாளராகவும் யதுவீர் உள்ளார்.
நவாப் ஆப் பட்டோடி: பாலிவுட் ஸ்டாரான சைப் அலிகானின் தந்தை மறைந்த மன்சூர் அலிகான் பட்டோடி, பட்டோடி பேரரசின் கடைசி அரசராக விளங்கினார். நடிகை ஷர்மிளா தாகூரை மன்சூர் அலிகான் பட்டோடி திருமணம் செய்து கொண்டார். சைப் அலிகான் இப்போது நவாப் ஆப் பட்டோடி என்ற பட்டத்தை வகிக்கிறார்.
இருப்பினும் அவரது முன்னோர்களைப் போல சைப் அலிகான் தனது தந்தையிடமிருந்து அரண்மனையைப் பெறவில்லை. மாறாக அவர் அந்த அரண்மனையை நீம்ராணா குரூப் ஆப் ஹோட்டல்களிடமிருந்து விலைக்கு வாங்கினார். சயீப் அலிகானின் தந்தை அந்த அரண்மனையை 17 ஆண்டுகால குத்தகைக்கு விட்டிருந்தார்.
ஜெய்ப்பூர் அரச குடும்பம்: மகாராஜா பவானி சிங் ஜெய்ப்பூரின் கடைசி மன்னராக இருந்தார். ஒரு மகன் இல்லாத நிலையில், மகாராஜா பவானி சிங் தனது மகள் தியா குமாரியின் மகனைத் தத்தெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் வளர்ப்பு மகன் பத்மநாப் சிங்குக்கு ஜெய்ப்பூர் மகாராஜா என்ற பட்டத்தை முறையாக வழங்கினார்.
ஜோத்பூர் அரச குடும்பம்: ஜோத்பூரின் முன்னாள் ஆட்சியாளர்களான ரத்தோர் குடும்பத்தின் வாரிசுகளான மகாராஜா கஜ் சிங் மற்றும் அவரது குடும்பத்தார் உமைத் பவான் அரண்மனையில் வசித்து வருகின்றனர்.
இந்த அரண்மனை உலகளவில் மிகப் பெரிய தனியார் குடியிருப்பு என்ற பெருமிதத்தைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையை தாஜ் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிர்வகித்து வருகிறது.
அத்துடன் ஜோத்பூர் அரச குடும்பம் பிரபலமான மேரங்கார் கோட்டையையும் கொண்டுள்ளது. அறக்கொடைகளுக்குப் பேர்போன மகாராஜா கஜ் சிங் புகழ்பெற்ற ராஜமாதா கிருஷ்ண குமாரி பெண்கள் பப்ளிக் ஸ்கூலை நிறுவினார். இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும்.
கெய்க்வாடு பேரரசு: பரோடாவை சேர்ந்த கெய்க்வாடு அரச வம்சத்தினர் வழிவந்த சமர்ஜித்சிங் ராவ் கெய்க்வாடும் அவரது குடும்பத்தாரும் லட்சுமி விலாஸ் அரண்மனையில் வசிக்கின்றனர். மகாராஜா சமர்ஜித்சிங் அரச பாரம்பரியத்துக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டுக்கும் பிரபலமானவர். ரஞ்சி டிராபிக்காக தனது மாநிலத்துக்காக மகாராஜா விளையாடியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் மேலாகும்.
பிகானீர் அரச குடும்பம்: மகாராஜா கர்னி சிங், மகாராணி சுஷீலா குமாரியின் மகளான இளவரசி ராஜ்யஸ்ரீ குமாரிதான் பிகானீரின் புகழ்பெற்ற லால்கார் அரண்மனையின் சொந்தக்காரர். தனது பரம்பரை உரிமையை வைத்து இந்த அரண்மனையை ஒரு பாரம்பரிய ஹோட்டலாக ராஜ்யஸ்ரீ மாற்றியுள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications