ரூ.640 கோடியில் ஆடம்பர பங்களா.. மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. இத்தனை வசதிகளா..?

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வருபவர் முகேஷ் அம்பானி. இவரது குடும்பத்தினர் தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கு பெயர்பெற்றவர்கள். குறிப்பாக, தங்கள் பிள்ளைகளுக்குப் பரிசுகள் வழங்குவதில், அவர்களுக்கு விலை ஒரு பொருட்டே இல்லை என்பதை உலகமே பலமுறை பார்த்திருக்கிறது.

மகள் இஷா அம்பானியின் திருமணத்திற்குப் பிளேயோன்ஸ் அழைத்தது முதல், இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ஜஸ்டின் பீபர் வரவழைத்தது வரை முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் அன்பின் வெளிப்பாட்டை அனைவரும் பார்த்துள்ளோம். இந்த சூழலில், உலகிலேயே மிகவும் செலவுமிக்க திருமணங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு பெற்றோர் அளித்த பரிசு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.640 கோடியில் ஆடம்பர பங்களா.. மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி.. இத்தனை வசதிகளா..?

ரூ.640 கோடி மதிப்புள்ள வில்லா : முகேஷ் மற்றும் நீதா அம்பானி தங்களது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெர்ச்சென்ட்க்கு ஒரு பிரம்மாண்டமான சொகுசு பங்களாவை திருமணப் பரிசாக அளித்துள்ளனர். இந்த ஆடம்பர பங்களா துபாயின் புகழ்பெற்ற பாம் ஜுமேரா தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது. சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பங்களா, மிக முக்கியமாக 70 மீட்டர் நீளமுள்ள தனிப்பட்ட கடற்கரையை கொண்டுள்ளது.

இந்த வில்லாவில் 10 ஆடம்பரமான படுக்கையறைகள் உள்ளன. இத்தாலிய மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இதன் உட்புறங்கள், பிரத்யேகமான கலைப்படைப்புகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், அனந்த் மற்றும் ராதிகா தங்கள் பொழுதைப் போக்க உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் இதில் உள்ளன. தனிப்பட்ட ஸ்பா மற்றும் அழகு நிலையம் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சொகுசு பங்களாவின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.640 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமணம் : பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து மீண்ட ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்ட்க்கும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் பிரம்மாண்டமான ரோகா சடங்குடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, பல வாரங்கள் நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகர் மற்றும் இத்தாலியில் நடைபெற்றன. இறுதியாக, 2024 ஜூலையில் மும்பையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஆனந்த் - ராதிகாவின் திருமண கொண்டாட்டங்களில் இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி ரிஹானா, ஜஸ்டின் பீபர், கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன் மற்றும் ஜான் சீனா போன்ற சர்வதேச பிரபலங்கள் மற்றும் உலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். பல்வேறு ஊடகத் தகவல்களின்படி, இந்தத் திருமணத்திற்காகச் சுமார் ரூ.5,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த செலவு, 2018 ஆம் ஆண்டில் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிளின் திருமணச் செலவை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் இந்த பிரம்மாண்டமான திருமணப் பரிசு, தங்கள் மகனின் மகிழ்ச்சிக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கான மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+