மெர்சிடிஸ்-பென்ஸ், BMW, ஆடி உள்ளிட்ட இந்தியாவின் சொகுசு கார் பிராண்டுகள், விற்பனையை அதிகரிக்கவும், தேங்கி கிடக்கும் கார்களை காலி செய்வதற்காக அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்களை வழங்க துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆடம்பர கார்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் மந்தமாக உள்ளது. இதை தூண்டுவதற்காக அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன சந்தையில் வெறும் 2% மட்டுமே கொண்டிருக்கும் ஆடம்பர கார் பிரிவு, 2024 ஆம் ஆண்டில் 5% வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் மந்தமான வளர்ச்சியாகும்.

இதனால் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் முன்னணி ஆடம்பர கார் பிராண்டுகள் பல்வேறு மாடல்களில் ரூ.10-15 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை வழங்குகின்றனர், இந்த தள்ளுபடி அளவு ஆன் ரோடு விலையை ஒப்பிடுகையில் 10-20 சதவீதமாகும்.
உதாரணமாக, ரூ.46 லட்சம் விலையுள்ள ஆடி A4 செடானின் அடிப்படை மாடல் இப்போது ரூ.7 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதேபோல் BMW X5 SUV ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான தள்ளுபடிகளுடன் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் iX எலக்ட்ரிக் SUV ரூ.15 லட்சம் வரையிலான தள்ளுபடிகளுடன் கிடைக்கிறது.
இந்த அட்டகாசமான தள்ளுபடி முதல் முறையாக ஆடம்பர பிரிவுக்குள் நுழையும் மக்களை பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என், மஹிந்திரா தார், ஹூண்டாய் டூக்சான் போன்ற பிரீமியம் வாகனங்களை வாங்க திட்டமிட்டும் வாடிக்கையாளர்களை ஆடம்பர் பிரிவுக்குள் இழுக்க முடியும் என ஆடம்பர கார் பிராண்டுகள் நம்புகிறது.
மந்தமான விற்பனை காரணமாக சொகுசு கார் தயாரிப்பாளர்களை தங்கள் சரக்குகளை காலி செய்வதற்காக அதிகப்படியான தள்ளுபடிகளை அளித்து வருகிறது. இதை பயன்படுத்தினால் 15 லட்சம் சேமிப்புடன் டக்கரான கார்களை வாங்கலாம்.
இந்த விற்பனை மந்த சூழ்நிலையில் ஆடி போன்ற பிராண்டுகள் விற்பனையில் பின்தங்கி, ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications