சென்னையில் ஆடம்பர வீடுகளை வாங்கி குவிக்கும் பணக்காரர்கள்.. ஆரம்ப விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!!

இந்தியாவில் சமீபகாலமாக அனைத்து முதலீடுகளிலும் அதிகப்படியான தடுமாற்றம் ஏற்படும் வேளையில் மீண்டும் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் முக்கிய முதலீடாக மாறி வருகிறது. தங்கம் விலையில் ஏற்படும் வளர்ச்சியும் 4-5 சதவீதமாகவே இருக்கும் காரணத்தால் தற்போது இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகள் முக்கியமான தேர்வாக உள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீடுகள் காலம் காலமாக இருப்பது தானே என நினைக்கலாம், ஆனால் கடந்த 3-5 வருடத்தில் இந்தியாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனையின் வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் பெரு நகரங்களில் ஆடம்பர கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வேகமாகவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆடம்பர வீடுகளை வாங்கி குவிக்கும் பணக்காரர்கள்.. ஆரம்ப விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!!

இந்தியாவில் டாப் 7 பெரு நகரங்களில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி - செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே சுமார் 84,400 ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வெறும் 39,300 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கிட்டதட்ட டபுள் மடங்கு வளர்ச்சி.

டெல்லி-என்சிஆர், மும்பை மண்டலம், பெங்களூரு, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய டாப் 7 பெரு நகரங்களில் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3.49 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளது. இதில் 84,400 வீடுகள் ஆடம்பர வீடுகள், இது மொத்த விற்பனையில் சுமார் 24 சதவீதமாகும். இதைவிட முக்கியமாந விஷயம் அந்த 84,400 வீடுகளின் ஆடம்பர விலையே 1.5 கோடி ரூபாய் தான்.

இந்த 9 மாத காலக்கட்டத்தில் சென்னையில் மட்டும் 3,330 ஆடம்பர வீடுகள் விற்கப்பட்டு கடந்த வருடத்தை காட்டிலும் 143 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல் டெல்லி என்சிஆர் பகுதியில் 119 சதவீதமும், மும்பை-யில் 74 சதவீதமும், பெங்களூரில் 142 சதவீதமும், புனே-வில் 191 சதவீதமும், ஹைதராபாத்தில் 260 சதவீதமும், கொல்கத்தாவில் 69 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஹைதராபாத் நகரத்தில் பதிவான 260 சதவீத வளர்ச்சி தான். இந்நகரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளது மட்டும் அல்லாமல் புதிதாக துவங்கப்பட்டு உள்ள பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் ஆடம்பர திட்டங்களாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+