இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் மலிவு விலை வீடுகளுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல திட்டங்களையும், சேவைகளையும் செயல்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
லாக்டவுன்-க்கு பிறகு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால் நாட்டின் அனைத்து முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் ஆடம்பர வீடுகள் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்தினர். இதனால் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆடம்பர வீடுகளுக்கான புதிய வீடுகள் அறிமுகம் அதிகரித்தது.

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனரோக் அறிக்கையின்படி, நாட்டின் டாப் 7 நகரங்களில் பல்வேறு பட்ஜெட்-களின் 2023 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் சுமார் 1,16,220 வீடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் ஆடம்பர வீடுகளின் பங்கீடு மட்டும் சுமார் 27 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 31,180 வீடுகள் ஆடம்பர வீட்டு பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் ஆடம்பர வீடுகளின் சப்ளை கடந்த 5 ஆண்டுகளில் 3வது காலாண்டில் உச்ச நிலையை அடைந்துள்ளது. இதேபோல் Knight Frank அமைப்பின் செப்டம்பர் காலாண்டு இந்திய ரியல் எஸ்டேட் அறிக்கையில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புடைய ஆடம்பர வீடுகளின் விற்பனை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் ஆடம்பர வீடுகளின் சப்ளை அதிகரித்துள்ள வேளையில் மலிவான வீடுகளின் சப்ளை குறைந்துள்ளது. பெரு நகரங்களில் மலிவான வீடுகள் என மதிப்பிடப்படும் 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய வீடுகள் பரிவின் விற்பனை 10 சதவீதம் குறைந்து 24,143 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications