செல்லமாக நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. தங்களுக்குப் பிடித்த நாய்களுக்கு பரிசாக அளிப்பதற்கு ஒரு விஷயம் வந்துள்ளது. இத்தாலியில் தயாரிக்கப்படும் சொகுசு பிராண்டான டோல்ஸ் அண்டு கப்பானா புதிதாக நாய்கள் சென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபெஃபெ எனப்படும் இந்த பர்ஃப்யூமின் பெயர் டோல்ஸ் அண்டு கப்பானா நிறுவனர் டோமினிகோ டோல்ஸின் அன்கண்டிஷனல் லவ் ஃபார் ஹிஸ் லாயல் டாக் ஃபெஃபெயில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.

மென்மையான, ஊடுருவக்கூடிய வாசனையான இந்த பர்ஃப்யூம் மனிர்களின் செல்லப் பிராணிக்காகவே 99 யூரோக்களுக்கு தயாரிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.9000 ஆகும். இந்த பிரீமியம் பர்ஃப்யூம் பாதுகாப்பான செல்லப் பிராணிகள் காஸ்மெடிக்ஸ் புரோட்டோகாலுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பியூரோ வெரிடாஸ் இத்தாலியா வகுத்துள்ள இந்த புரோட்டோகாலுக்கு ஏற்றபடி விலங்குகளுக்கு பாதுகாப்பானவையாகவும் அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை தயாரிக்க வேண்டும் என்று ஃபெஃபெ அறிமுகத்தின் போது டோல்ஸ் அண்டு கப்பானா கூறியது.
இந்த பர்ஃப்யூமை அறிமுகம் செய்வதற்கு முன்பாக நாய் வளர்ப்பவர்கள் பலரிடம் இது பற்றிய கருத்து கேட்டபோது, ஃபெஃபெயின் நறுமணம் ஜென்டிலாகவும் தங்களது செல்லப் பிராணிகளுக்குப் பிடித்த வகையிலும் இருப்பதாகக் கூறியுள்ளனர். டோல்ஸ் அண்டு கப்பானாவின் வெப்சைட்டில் ஃபெஃபெக்கான பக்கத்தில் இந்த பிராண்டுக்கு கால்நடை மருத்துவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அத்துடன் பர்ஃப்யூம் பற்றி வாடிக்கையாளர்களின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
நாய்களுக்கான இந்த புதிய பர்ஃப்யூம் அழகிய பச்சை நிற பாட்டிலில் அடைக்கப்பட்டு வருகிறது. அந்த பாட்டிலில் பொன்னிறத்தில் நாயின் பாதம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் மூடி உள்ளது. நாயின் பாதம் 24 கேரட் தங்கத்தில் பூசப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தயாரிப்பு செல்லப் பிராணிகள் வளர்ப்புக்கான பொருட்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொகுசான ஃபெஃபெ பர்ஃப்யூமை நாய்களின் உரிமையாளர்கள் தங்களது கைகளில் ஸ்பிரே செய்துவிட்டு பின்னர் கைகளால் நாயின் முதுகில் இருந்து வால்நோக்கி முடிகளில் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்வதன்மூலம் நாயின் உடலில் தேவையான அளவுக்கு நறுமணம் பரவும். இந்த பர்பியூமை நாய்களின் முடியில் நேராகவும் ஸ்பிரே செய்யலாம். ஆனால் நாயின் மூக்குப் பகுதியை தவிர்க்க வேண்டும்.
Story Written by: jayachandran
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications