இந்தியாவில் மக்களின் செலவிடும் பழக்கம் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நடுத்தர பொருளாதார பிரிவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் மேல் தட்டுக்கு வளர்ந்துள்ளனர். இதன் வாயிலாக இந்தியாவில் எப்போது இல்லாமல் ஆடம்பர பிரிவில் அதிகப்படியான வர்த்தகம் நடக்கிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையும் விதிவிலக்கில்லை என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை, குறிப்பாக ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வீடுகள், 2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கணிசமான உயர்வை கண்டுள்ளது. CBRE இன் அறிக்கையின்படி, ரூ.4 கோடி மற்றும் அதற்கு அதிகமான மதிப்பு கொண்ட ஆடம்பர ரியல் எஸ்டேட் பிரிவில் விற்பனை அளவு வருடாந்திர அளவில் 37.8% அதிகரித்து 12,625 வீடுகள் விற்கப்பட்டு உள்ளது.

டெல்லி-NCR, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தற்போது ஆடம்பர வீடு விற்பனை சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் நடந்த மொத்த ஆடம்பர வீடு விற்பனையில் கிட்டத்தட்ட 90% பங்கைக் இந்த 3 நகரங்கள் மட்டுமே கொண்டுள்ளது.
டெல்லி-NCR பகுதியில் ஆடம்பர வீடுகளின் விற்பனை வருடாந்திர அளவில் 72% அதிகரிப்புடன் 5,855 வீடுகள் விற்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மும்பை 18% வளர்ச்சியுடன் 3,820 வீடுகள் விற்கப்பட்டு உள்ளது. இதில் புனேவும் கணிசமான உயர்வுடன் 810 ஆடம்பர வீடுகள் விற்கப்பட்டு உள்ளது.
ஆடம்பரமான லைப்ஸ்டைல், சிறந்த வசதிகள் மற்றும் அதிகரித்து வரும் டிமாண்ட் ஆகியவை ஆடம்பர வீடுகளின் விற்பனையை அதிகரித்துள்ளது. கூடுதலாக, அதிகரித்து வரும் NRI முதலீடுகள் இந்த பிரிவை மேலும் ஊக்குவித்துள்ளது.
தொழில் நிபுணர்கள், ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து வளரும் என்று கணித்துள்ளனர், அடுத்தக்கட்டமாக நொய்டா, பெங்களூரு, புனே மற்றும் சென்னை போன்ற பிற முக்கிய சந்தைகளிலும் பிரீமியம் பிரிவுகளுக்கான சந்தையாக மாறும்.
2024 ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் முக்கிய நகரங்களில் ஆடம்பர வீடு விற்பனை வருடாந்திர அடிப்படையில் 82% அளவிலான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இதேவேளையில் இந்தியா முழுவதும் ஆடம்பர வீட்டு திட்டங்கள் அதிகரித்துள்ளதால் சமானிய மக்களால் அதிகம் வாங்கும் பட்ஜெட் வீடுகளுக்கான வரவு குறைந்துள்ளது. இதனால் சந்தையின் போக்கே அதிக விலை கொடுத்து வீடுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications