மஹிந்திரா & மஹிந்திராவுக்கே இந்த நிலையா.. கதறும் உரிமையாளர்கள்..!

டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு வாகன நிறுவனமான மஹிந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று, தனது டிசம்பர் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.

இதன் படி இந்த நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் 73% நிகரலாபம் வீழ்ச்சி கண்டு, வெறும் 380 கோடி ரூபாய் லாபம் மட்டுமே கண்டுள்ளது. இதில் மிக மோசமான செய்தி என்னவெனில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,396 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முதலே பெருத்த அடியினை வாங்கி வரும் வாகனத்துறைக்கு மத்தியில், அந்த வீழ்ச்சியானது மஹிந்திரா நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்.

வீழ்ச்சி கண்ட வருவாய் விகிதம்

வீழ்ச்சி கண்ட வருவாய் விகிதம்

முந்தைய ஆண்டை காட்டிலும் டிசம்பர் காலாண்டு மொத்த வருவாய் 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 12,120 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,893 கோடி ரூபாய் வருவாயை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல செயல்பாட்டு விளிம்பும் 14.8% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 13.2% ஆக இருந்துள்ளது.

வாகன விற்பனை

வாகன விற்பனை

இந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 1,23,353 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 1,33,508 வாகனங்கங்களை விற்பனை செய்திருந்தது கவனிகக்தக்கது. இது சுமார் 8 சதவிகிதம் வீழ்ச்சியாகும். இதில் டிராக்டர் விற்பனை 6% வீழ்ச்சி கண்டுள்ளது.

டிராக்டர் விற்பனை

டிராக்டர் விற்பனை

டிசம்பர் காலாண்டில் டிராக்டர் விற்பனையானது 81,435 யூனிட்களாக சரிந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 87,063 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல ஏற்றுமதி 22% வீழ்ச்சி கண்டுள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 9,633 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,363 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய காலாண்டுகளை விட பரவாயில்லை

முந்தைய காலாண்டுகளை விட பரவாயில்லை

நல்ல பருவமழை மற்றும் தேவை, மேம்பட்ட பணப்புழக்க நிலைமைகள், குறிப்பாக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் புதிய ஏவுதல், புதிய சலுகை திட்டங்கள் போன்றவை, இந்த மிதமான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்ததாகவும், இது முந்தைய இரண்டு காலாண்டுகளை விடவும் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.

விற்பனை படு வீழ்ச்சி

விற்பனை படு வீழ்ச்சி

கடந்த மூன்றாவது காலாண்டில் இந்தியா வாகன விற்பனையானது (இரு சக்கர வாகன விற்பனை தவிர) 3% வீழ்ச்சி கண்டது. இது 15.4% மற்றும் 26.6% முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் முறையே வளர்ச்சி கண்டிருந்தது. எனினும் வர்த்தக வாகன பிரிவானது மீண்டும் மீண்டும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இது சுமார் 17.3% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் கனரக வாகன விற்பனையானது 56.4% வீழ்ச்சி கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+