இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான மஹிந்திரா குழுமத்தின் தலையாய நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, RBL Bank-யில் சில வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்து கைப்பற்றியிருந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துள்ளது,
ஆர்பில் வங்கி கடந்த சில மாதங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெறும் முக்கிய வங்கியாக மாறியுள்ளது. இதற்கு ஒரே காரணம் துபாய்-ஐ சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி இவ்வங்கியில் பெரும் பங்குகளை கைப்பற்றி இந்தியாவில் தனது கிளை வாங்கியாக ஆர்பிஎல்-ஐ மாற்றும் முயற்சி இந்திய வங்கி துறையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான சூழ்நிலையில் மஹிந்திரா ஆர்பிஎல் வங்கியில் வைத்திருந்த பங்குகளை முழுமையாக விற்பனை செய்துள்ளது பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஆர்பிஎல் வங்கியில் வைத்திருந்த பங்குகளை மொத்தமாக 678 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 2023இல் 417 கோடி ரூபாய்க்கு 3.53 சதவீத பங்கை வாங்கிய நிலையில் தற்போது இதை 62.5 சதவீத லாபத்துடன் விற்பனை செய்துள்ளது.
நவம்பர் 6 அன்று மஹிந்திரா பங்குச்சந்தைக்கு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் M&M பங்கு விலை கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து ரூ.3,674ஐ தொட்டது. இதேபோல் ஆர்பிஎல் வங்கி பங்குகள் 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 332 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
RBL Bank-ல் பெரும் பகுதி பங்குகளை சுமார் 3 பில்லியன் டாலர் அதாவது ரூ.26,850 கோடி மதிப்பில் துபாய்-ஐ சேர்ந்த Emirates NBD வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக திகழ்கிறது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் Emirates NBD-யின் கிளை வங்கியான ஆர்பிஎல் வங்கி இந்தியாவில் இயங்கும், இதற்கான ஒப்புதலை ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வங்கித்துறையில் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் இந்திய வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் NBFC பிரிவில் சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளும், ஒப்பந்தங்களும் நடந்துள்ளது. இதற்கு மத்தியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளின் பங்கு விற்கவும், இதற்கான கதவுகளையும் திறந்துள்ளது.
இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இகுக்கும் வேளையில், இந்திய வங்கித்துறையில் இடம்பிடிப்பது என்பது வெளிநாட்டு வங்கிகளுக்கு ஒரு ஜாக்பாட் போன்றது. இதற்காகவே தேடி தேடி வங்கிகளையும், வங்கி பங்குகளை வாங்கவும் முயற்சி செய்து வருகின்றனர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.


Click it and Unblock the Notifications