உலக நாடுகளில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடந்த 2 வருடமாக ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் மிகவும் மந்தமாகவே இருந்தது. ஆனால் கடந்த 3 மாதத்தில் நிலைமை மெல்ல மெல்ல மாறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் பிரபலமான வேலைவாய்ப்பு தேடுதல் தளமான நாக்ரி.காம் நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் டாப் நகரங்களில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம், இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் தொழில்நுட்பம், தரவு மற்றும் மேலாண்மை துறைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது தெளிவாகிறது. அப்படி நாட்டின் முக்கிய நகரங்ளில் நிலைமை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
பெங்களூரு:
மெஷின் லேர்னிங் (ML) இன்ஜினியர்கள்: ஏஐ-க்கு முன்பே உலகளவில் கொடிக்கட்டி பறந்த ஒரு தொழில்நுட்பம் என்றால் அது மெஷின் லேர்னிங் தான், அந்த வகையில் தற்போது ஏஐ துணை உடன் மெஷின் லேர்னிங் புதிய சக்தியாக மாறியுள்ளது. இந்த காம்மோ-வில் அனுபவம் பெற்று இருந்தாலும் அவர்களை பன்னீரில் குளிப்பாட்டி லட்சம் லட்சமாக சம்பளம் தரும் அளவுக்கு இத்தொழில்நுட்பத்தில் பெரும் டிமாண்ட உள்ளது.
குறிப்பாக பெங்களூரில் மெஷின் லேர்னிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்களுக்கான தேவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது பெங்களூரு, மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளுக்கான மையமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
அதிகரித்து வரும் பிற வேலைகள்: மனிதவள மேலாண்மை (HR) துறை பொது நிபுணர்கள் (HR Generalists) வேலைவாய்ப்புகள் 53% அதிகரித்துள்ளன. மேலும், ஆப்ரேஷன்ஸ் மேனேஜர்ஸ் தேவை 45% உயர்ந்துள்ளது.
இதேபோல் டிஜிட்டல் சேவை அதிகரித்திருக்கும் வேளையில் ஃபுல் ஸ்டாக் டேட்டா சையின்டிஸ்ட் பணிகளும் 36% அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் டேட்டா த பணிகளுக்கான தேவை அதிகரித்து வருவதை காட்டுகின்றன.
அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்: 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 22% அதிகரித்துள்ளன. இது மிகவும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
மும்பை:
தொழில்நுட்ப மற்றும் டேட்டா வேலைவாய்ப்பு: ஃபுல் ஸ்டாக் டேட்டா சையின்டிஸ்ட் பணிகளில் 38% வளர்ச்சி காணப்படுகிறது. வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் (Customer Service) பணிகளில் 46% உயர்வு மற்றும் கட்டணம்/திட்டமிடல் பொறியாளர்கள் (Billing/Planning Engineers) பணிகளுக்கு 35% டிமாண்ட் அதிகரித்து காணப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் துறை வளர்ச்சி: 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட நிபுணர்களுக்கான தேவை 22% அதிகரித்துள்ளது.
பிற துறை: பார்மா / பயோடெக் / Clinical Research துறையில் 8% வளர்ச்சியும், தகவல் தொழில்நுட்பம் / மென்பொருள் சேவை துறையில் 10% வளர்ச்சியும் காணப்படுகிறது.
டெல்லி/என்.சி.ஆர்:
தரவு சார்ந்த வேலைவாய்ப்புகள்: டேட்டா வேர்ஹவுஸ் / கண்சல்டன்ட் வேலைவாய்ப்புக்கான தேவை 40% அதிகரித்துள்ளது. கொள்முதல்/ கொள்முதல் பொறியியல் துறையில் 33% வளர்ச்சி காணப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த வேலைவாய்ப்பு: 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட நிபுணர்களுக்கான தேவை 18% அதிகரித்துள்ளது.
இதேபோலவே நாட்டின் பிற முக்கிய நகரமான சென்னை, ஹைத்ராபாத் நகரங்களிலும் டேட்டா துறை சார்ந்த இன்ஜினியரிங் பணிகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. சென்னையில் பின்டெக் துறையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.
புதிதாக இந்தியாவில் செமிகண்டக்டர் துறையிலும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் உயர் தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றவர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications