உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வழக்கம் போல் கிடைக்கும் உற்சாக வரவேற்பு இந்த முறை கிடைக்கவில்லை என்றாலும், இதை வாங்குவதற்காக காத்திருக்கம் மக்களும் உண்டு. அதில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்.
புதிய ஆப்பிள் ஐபோன் 15 இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ள நிலையில், ஐபோன் மாடல்களில் சில இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் துபாயுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைகள் அதிகமாக உள்ளது, பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கு முன்பு வரையில் இந்தியாவுக்கு ஐபோன் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது, இதனால் விலை அதிகமாக இருப்பதை பலராலும் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் ஐபோன் பிள்ஸ் அடுத்த காலாண்டு முதல் உற்பத்தி துவங்க உள்ளது, ஐபோன்15 பேசிக் மாடல் ஏற்கனவே தயாரிக்கப்பட ஆப்பிள் தனது சப்ளையர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இப்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான ஆப்பிள் ஐபோன்கள் சென்னையில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டெராபைட்) விலை இந்தியாவில் ரூ. 1,99,900 ஆகும். முதல் முறையாக ஐபோன் இந்தியாவில் 2 லட்சம் ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. இதே ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1TB) அமெரிக்காவில் 1,599 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ.1,32,717.
ஒரே போன் அமெரிக்கா, இந்திய விலையை ஒப்பிடும் போது 51% விலை அதிகமாக உள்ளது. இந்த குறிப்பிட்ட மாடல் இன்னும் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் மாடல்களுக்கு, விலை வேறுபாடு முழுமையாக குறைக்கப்படாமல் கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கிறது, அமெரிக்க விலைகளுடன் ஒப்பிடும் போது சுமார் 20% அதிகமாக தான் உள்ளது.
இது அமெரிக்க நிலவரமாக இருக்கும் போது மறுபுறம் துபாயில் ஐபோன் 15, ஐக்கிய அமீரகத்தில் உற்பத்தி செய்யப்படாவிட்டாலும் அங்கு ஐபோன் 15 AED 3,399 விலைக்கு அதாவது இந்திய ரூபாயில் தோராயமாக ரூ.76,817 விலையில் இந்திய விலையை காட்டிலும் சற்றே குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 15 ஆரம்ப விலையே 79900 ரூபாய்.
ஆப்பிள் ஐபோன் ப்ரோ மாடல் விலையில் உள்ள இடைவெளி 22% இறக்குமதி வரியை ஈர்ப்பதால் இந்தியாவில், ஐபோன் 15 ப்ரோவின் அடிப்படை மாடல் அமெரிக்காவில் ரூ.82,917 விற்கப்படும் போது ரூ.1,34,900 விலைக்கு விற்கப்படுகிறது. இதுவே துபாயில் இதன் விலை ரூ.97,157 மட்டுமே.
இதேபோல் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலை கணக்கிட்டால் இந்தியாவில் ரூ. 1,59,900, அமெரிக்காவில் ரூ.99,517 மற்றும் துபாயில் ரூ.1,15,237 விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்த விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன.
இதுக்குறித்து ஆப்பிள் சப்ளையர் ஒருவர் கூறுகையில் இறக்குமதி வரி செலுத்திய பிறகு பல உதிரிபாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விநியோகச் சங்கிலி பிரச்சனையின் காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் விலை அதிகமாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications