இனி மைக்ரோசாஃப்ட், கூகுள் வேலையில்ல.. Zoho நிறுவனத்திற்கு முழு ஆதரவு கொடுக்கும் மத்திய அரசு!

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றங்கள், மத்திய அரசின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான அழுத்தம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஜோஹோ நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்புகளுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், மைக்ரோசாஃப்ட், மெட்டா, கூகுள் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களை ஜோஹோ நிறுவனம் எதிர்கொள்ள முயற்சிக்கும் இந்த நேரத்தில், இந்நிறுவனத்தின் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கடந்த காலத்தில், ஏர்டெல்லின் 'ஹைக்' மற்றும் ட்விட்டரின் பிரதிபலிப்பான 'கூ' போன்ற தளங்கள் இந்தியாவில் ஆரம்பத்தில் வரவேற்பை பெற்று, பின்னர் மூடப்பட்டன. ஆனால், ஜோஹோ விஷயத்தில், அரசு தொடக்கத்தில் இருந்தே சரியான நகர்வுகளை மேற்கொண்டதாக தெரிகிறது. செப்.22ஆம் தேதி மத்திய அமைச்சர் வைஷ்ணவ், இனி ஜோஹோ தளங்களுக்கு மாறுவதாக அறிவித்தார். அண்மையில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட்டுக்கு மாற்றான ஜோஹோ ஷோவை பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தினார்.

இனி மைக்ரோசாஃப்ட், கூகுள் வேலையில்ல.. Zoho நிறுவனத்திற்கு முழு ஆதரவு கொடுக்கும் மத்திய அரசு!

கடந்த ஒரு வாரமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட பல அமைச்சர்களும், பிரபலங்களும் ஜோஹோவின் அரட்டை செயலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரட்டை செயலியை இதுவரை 7.5 மில்லியன் பேர் டவுன்லோடு செய்துள்ள நிலையில், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும், கூகுள் ப்ளேயின் முதல் 100 இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

அதேசமயம், கல்வித் துறையும் அதன் அதிகாரிகளை அலுவலகப் பணிகளுக்கு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸுக்குப் பதிலாக ஜோஹோ கருவிகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு திடீரென வெளிநாட்டு மென்பொருள் மீதான தேவையை குறைத்து, ஜோஹோவுக்கு ஆதரவு தெரிவிப்பது பல சந்தேகங்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறது.

இதுகுறித்து ரிஷப் முகர்ஜி என்ற எக்ஸ் தள பயனர், "ஒரு குறிப்பிட்ட அமைச்சர் மட்டும் எப்படி ஸோஹோவுக்கு மாற முடியும்? மீதமுள்ள அரசு எப்படி ஒருங்கிணைக்கும்? பாதுகாப்புக் கவலைகள் எப்படித் தீர்க்கப்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜோஹோ, அரசு மின்னஞ்சல் சேவைகள் மற்றும் பிற டிஜிட்டல் சேவைகளை கையாள 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் தாங்கள் வெற்றி பெற்றதாக விளக்கமளித்தது. மேலும், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வெளிப்படையான டெண்டர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கடுமையான சோதனைக்கு பிறகே ஜோஹோ ஒர்க்ஸ்பேஸுக்கு மாற்றுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு எக்ஸ் தள பயனர், அரசின் இந்த நடவடிக்கையை போட்டிக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார். இதே போன்ற உள்நாட்டுப் தயாரிப்புகள் பல இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பது எப்படிப் போட்டிக்கு நியாயமானதாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

உலகத் தரம் வாய்ந்த ஒரு மென்பொருளை உருவாக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல், ஜோஹோவுக்கும் நியாயமான வாய்ப்பு தேவை. அதிலும் குறிப்பாக, அதன் அனைத்துத் தயாரிப்புகளும் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன.

சீனா, அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் : WeChat, TikTok, Baidu என தொடங்கி Deep Seek வரை சீனா தனது சொந்த இணைய சூழலை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது. அமெரிக்கா தயாரித்த கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலிகளுக்கு அணுமதியை மறுப்பதன் மூலம், சீனா தனது குடிமக்கள் உள்ளூர் கருவிகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்து, உள்நாட்டு தொழில்நுட்பத் துறையை ஊக்குவித்து வருகிறது.

அமெரிக்காவிலும், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், தங்கள் நாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை போல் அல்லாமல், ஜோஹோ என்பது கூகுளைப் போன்ற ஒரு தயாரிப்பு சார்ந்த நிறுவனம். நாங்கள் ஒரு நிறுவனத்தை மட்டும் உருவாக்கவில்லை, ஒரு தொழில்நுட்பச் சூழலை உருவாக்குகிறோம் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். எனவே, பல சவால்களை சந்தித்து வரும் ஜோஹோவுக்கு விமர்சனங்களை விட இந்தியாவின் ஆதரவு தான் தேவைப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+