மத்திய பிரதேச அரசு மதுவிலக்கினை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மது விற்பனையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் புனித தலங்கள் அமைந்துள்ள 17 இடங்கள் உட்பட 19 இடங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவு ஆல்கஹால் கலந்த பானங்களை மட்டுமே விற்பனை செய்யக்கூடிய பார்கள் செயல்படும் என்றும், 19 இடங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய மதுபான கொள்கையில் 10 சதவீதம் என்ற அளவில் ஆல்கஹால் கலந்த பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் மட்டுமே புதிய மதுபான பார்களில் விற்பனைக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் 470 மதுபான பார்கள் பயன்பாட்டில் செயல்பாட்டில் இருக்கின்றன .இந்த பார்களில் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகளின் படி புனித தலங்கள் கொண்ட 19 இடங்களில் செயல்படும் 47 மதுபான கடைகள் மூடப்பட உள்ளன . உஜ்ஜெயின், மகேஸ்வர், மண்டலகேசுவரர், சித்ரகுத், தாடியா உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 இடங்களில் உள்ள மதுவிற்பனை கடைகள் மூடப்படுவதால் தங்கள் மாநில அரசுக்கு 450 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் மதுவிற்பனை தடை செய்யப்பட்ட நகரங்களில் இருப்பவர்கள் வெளியிலிருந்து மதுபானம் வாங்கி வந்து தனி நபராக அருந்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மதுவிலக்கு இங்கே அமல்படுத்தப்படவில்லை என்றும் மது விற்பனை தான் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மத்தியபிரதேச மாநில அரசு கூறியுள்ளது. கூடிய விரைவில் இந்த பகுதிகளில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே வேளையில் இதனால் தங்கள் மாநிலத்தின் ஒயின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒயின் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதியிலேயே சில்லறை விற்பனை நிலையங்களையும் தொடங்க அனுமதி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திராட்சை மட்டுமில்லாமல் மற்ற பழங்களில் இருந்தும் ஒயின் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications