மத்திய பிரதேச அரசு, மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய படியாக, 17 முக்கிய நகரங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் மோகன் யாதவ் இந்த முடிவை அறிவித்தார். முதல் கட்டமாக ஆறு நகராட்சிகள், ஆறு நகர பேரூராட்சிகள் மற்றும் ஆறு கிராம பஞ்சாயத்துகளில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக 17 நகரங்களில் மதுபான கடைகளை மூட நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடைகள் வேறு எங்கும் மாற்றப்படாது. அதே நேரம் இந்த கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

தடை அமல்படுத்தப்படும் நகரங்கள்: உஜ்ஜைன், மைஹார், டாடியா, பன்னா, மண்டலா, முல்தாய், மந்த்சௌர், ஓர்ச்சா, சித்ரகூட், அமர்கண்டக், மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், சல்கான்பூர், பந்தக்பூர், குண்டல்பூர், பர்மன்கலா, லிங்கா, பர்மன்குர்ட் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
மாநிலத்தின் 17 மத வழிபாட்டுத் தலங்களில் மது விற்பனையைத் தடை செய்வதற்கான மத்தியப் பிரதேச அரசின் முடிவு குறித்து துணை முதல்வரான ஜெகதீஷ் தேவ்தா சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
"இந்த முடிவுக்கு மரியாதைக்குரிய முதல்வருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் படிப்படியாக மது விலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்றாலும், இது ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை", என்று கூறியுள்ளார்.
மது விற்பனைக்கு அப்பால் மதத் தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதற்கான செயல்முறையையும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளது. மதுபானத் தடையை ஆதரிக்கும் பல மதத் தலைவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத நகரங்களை மது மற்றும் இறைச்சி இல்லாததாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவு அறிவிக்கப்படும். கலால் துறை அதற்கான வரைவு அறிக்கையைத் தயாரித்து வருகிறது, என்று முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
2028-ஆம் ஆண்டு வருகின்ற சிம்ஹஸ்த கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத நகரமான உஜ்ஜைனில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது, கும்பமேளாவிற்கான முந்தைய ஏற்பாடுகளாக கருதப்படுகிறது. ஆன்மீகத் தளங்களைப் பேணுவதற்கும் அவற்றின் புனிதத்தை பாதுகாப்பதற்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications