இந்தியாவின் முதல் சோலார் சிட்டி.. சாஞ்சி-க்கு புதிய அங்கீகாரம்..!

இந்தியாவின் புகழ்பெற்ற ஸ்தூபி அமைந்திருக்கும் வரலாறு சிறப்புமிக்க சாஞ்சி நகரம் இப்போது இந்தியாவின் முதல் 'சோலார் சிட்டி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த மாபெரும் நிகழ்வை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சாதனையை இந்திய மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தியாவின் முதல் சோலார் சிட்டி.. சாஞ்சி-க்கு புதிய அங்கீகாரம்..!

நாட்டின் முதல் சோலார் நகரமாக மாறியதன் மூலம், இந்தியாவின் பிற நகரங்களுக்கும், உலகிற்கும் முன்னோடியாக சாஞ்சி நகரம் உள்ளது. கார்பன் டைஆக்சைட் வெளியேற்றத்தை ஆண்டுதோறும் 14,324 டன்கள் குறைப்பதன் மூலம் கணிசமான மாற்றத்தை இந்திய சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் என்பதை சாஞ்சி நகர சோலார் திட்டம் உறுதியளிக்கிறது.

சாஞ்சி நகரத்தில் தற்போது 3 மெகாவாட் சோலார் தளம் உள்ளது, இது இந்நகரின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதே நேரத்தில், விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 5 மெகாவாட் சோலார் தளம் கட்டப்பட்டு வருகிறது. இந்த 3 மெகாவாட் ஆலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கிகாரம் கொடுக்கப்பட்ட சாஞ்சி ஸ்தூபி அமைந்திருக்கும் அருகில் 5 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் திட்டமிட்டப்பட்டு கட்டமைக்கப்பட்டு வரும் 5 மெகாவாட் சோலார் தளம் கட்டப்பட்ட பின்பு சாஞ்சி மின் உற்பத்தி உபரி நகரமாக மாற உள்ளது. மேலும் ஓம்காரேஷ்வரில் உள்ள அணை நீரின் மேல் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் ஆலை கட்டும் திட்டம் உட்பட் பல்வேறு சோலார் திட்டங்கள் மத்திய பிரசேத மாநிலத்தில் நடத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சவுகான் தெரிவித்தார்.

அனல்மின் ஆலைகளை விட கிரீன் எனர்ஜி உற்பத்தி வழிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார். சாஞ்சியின் நகரின் சோலார் சிட்டியாக மாற பல முக்கியமான பணிகள் வீட்டில் இருந்து மக்கள் சேவை வரையில் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் சோலார் சிட்டி.. சாஞ்சி-க்கு புதிய அங்கீகாரம்..!

வீடுகளில் ஆற்றல்-திறனுள்ள சாதனங்கள் அதாவது குறைந்த மின்சாரம் மட்டுமே ஈர்க்கும் கருவிகள், ஈ-சார்ஜிங் நிலையங்கள், சோலார் தெருவிளக்குகள் மற்றும் வீடுகளில் சோலார் வாட்டர் பம்புகள் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் பயன்படுத்தனர்.

கூடுதலாக, சாஞ்சியில் உள்ள ஒவ்வொரு வீடும் குறைந்த மின்சாரம் ஈர்க்கும் மின்விசிறிகள், டியூப் லைட்டுகள், மற்றும் எல்.ஈ.டி பல்புகள் பெற உள்ளனர். மேலும் ஏறக்குறைய 2,000 மாணவர்கள் சோலார் விளக்குகளைப் பெறுவார்கள், தெரு வியாபாரிகளுக்கு சூரிய ஒளி விளக்குகள் பொருத்தப்படும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து தேவையான உபகரணங்களும் ஏற்கனவே கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளது என்பது தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+