சென்னையில் உள்ள 160 ஏக்கர் அரசு நிலத்தில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் கோல்ஃப் மைதானம் ஒன்றை பராமரித்து வந்தது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு எதிராக மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி அரசின் முடிவுக்கு எதிராக எந்தவித தடையையும் விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். அரசு நிலத்தை, அரசு எதற்காக பயன்படுத்தினாலும் அதில் நீதிமன்றத்தின் தலையீடு இருக்க முடியாது என்றும், செங்கல்பட்டு கலெக்டர் கூட பொதுநலன் கருதி இந்த வழக்கில் நுழையலாம் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் நீர் நிலைகளின் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. ஏனெனில் சென்னை முக்கிய தொழில் மையமாக இருந்து வருகிறது. அதோடு இந்த கோல்ஃப் மைதானம் இருக்கும் இடம் நகரின் மையப் பகுதி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த நிலத்தை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றினால் மழைநீர் சேமிக்கப்படும். இதன் மூலம் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் தடுக்கப்படும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் மேம்படும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரரான ஜிம் கானா கிளப் 1887-ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் 160 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் கோல்ஃப் மைதானத்தை பராமரித்து வருகிறது. இந்தக் கிளப் 140 ஆண்டுகளுக்கும் மேலாக கோல்ஃப் மைதானத்தின் நிர்வாகம், உடைமை ஆகியவற்றை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2027-ஆம் ஆண்டில் 150-வது ஆண்டு விழாவை கொண்டாட எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கிளப் தனது புகாரில் கூறியிருந்தது. அப்படி இருக்க எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படாமல் 120 ஏக்கர் நிலத்தில் MRC-க்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று அரசு ஒரு அரசாணையை வெளியிட்டதாகவும் கிளப் தெரிவித்தது.
இந்த மனுவை எதிர்த்து, நிலம் MRC-க்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டதாகவும், எனவே, மனுதாரரான ஜிம் கானா கிளப் இந்த விவகாரத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. நீதிமன்றம், பொது நலன் கருதி, கிண்டி கோல்ஃப் மைதானத்தை அரசு கையகப்படுத்தியதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.


Click it and Unblock the Notifications