இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிறுவனத்தை மூடவும், உரிய நிறுவன கலைப்பலுவலர்-ஐ நியமிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பிற்குத் தடை விதித்து 2 வார கால அவகாசம் கொடுத்துள்ளது. என்ன பிரச்சனை..?
கிரெட்டி சூசி வழக்கு
கிரெட்டி சூசி அமைப்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் செய்யப்பட்ட இன்ஜின் மெயின்டனென்ஸ் பணிக்கான 24.01 மில்லியன் டாலரை SRT டெக்னிக்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்தப்படவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை மூடிவிட்டு உரிய நிறுவன கலைப்பலுவலர் அதாவது liquidator நியமிக்க உத்தரவிட்டது என மும்பை பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமே அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
SRT டெக்னிக்ஸ் நிறுவனம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களின் இன்ஜின் மெயின்டனென்ஸ் பணிகளைச் செய்ய SRT டெக்னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய DGCA ஒப்புதல் இல்லை என ஸ்பைஸ்ஜெட் கூறியும், சென்னை உயர் நீதிமன்ற ஏற்காமல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை மூடிவிட்டு உரிய நிறுவன கலைப்பலுவலர் அதாவது liquidator நியமிக்க உத்தரவிட்டது எனவும் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய உத்தரவு
இந்த உத்தரவை வெளியிட்டு அடுத்தச் சில மணிநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முந்தைய ஆணையை ரத்து செய்துவிட்டு புதிய தீர்ப்பை கொடுத்தது. இப்புதிய தீர்ப்பில் ஸ்பைஸ்ஜெட் 2 வாரத்திற்குள் 5 மில்லியன் டாலர் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும், 3 வாரத்திற்குள் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை ஸ்பைஸ்ஜெட் காண வேண்டும் என உத்தரவிட்டது.
ஸ்பைஸ்ஜெட் ஒப்புதல்
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உரியக் காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளது. மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3 வார காலத்திற்கு மேல் முறையீடு செய்யவும் முயற்சி எடுக்க உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications