மதுரை: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அந்தந்த ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமானது ரொக்கமாக கைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படுவதை போல குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தவும் வலியுறுத்தி இருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்ற மதுரை கிளை அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கிலேயே இந்த பொங்கல் பரிசு தொகையை செலுத்துவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கலாமென அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் தற்போது வரை பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் வரக்கூடிய பொங்கலில் பரிசுத்தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தவும் ,வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பரிசாக வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு ,தேங்காய் உள்ளிட்டவற்றை தமிழக விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தும் போது குறைந்தபட்ச பேலன்ஸ் இல்லை என்பதற்காக சிலரது வங்கி கணக்கிலிருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்து கொள்கின்றன என தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதிகள், ஏற்கனவே தெரிவித்தது போல பொங்கல் பரிசு தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நுகர் பொருள் வாணிப கழக கூடுதல் செயல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications