சென்னை சுற்றுசூழலுக்கு புது நுரையீரல்.. பெங்களூர் போலவே பசுமையா மாறப்போகுது..!!

சென்னை: இந்தியாவில் எந்த ஒரு நகரமாக இருந்தாலும் சரி காற்று மாசுபாடு என்பது மிகவும் மோசமாக உள்ளது, அதுவும் சென்னை போன்ற நகரத்தில் போக்குவரத்து நெரிசல் உடன் உற்பத்தித் துறையின் பாதிப்பும் அதிகமாக இருக்கும் காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காற்று மாசுபாடு என்பது மாநிலத்தின் பிற நகரங்களைக் காட்டிலும் சற்று அதிகம் தான்.

இந்த நிலையில் சென்னைக்கும், சென்னை மக்களுக்கும் புது நுரையீரலாக செயல்படப்போகிறது, தமிழ்நாடு அரசு புதிதாக அமைக்கப்படும் பசுமை பூங்கா. பெரு நகரங்களை பொறுத்தவரையில் பெங்களூர் தான் அதிக பூங்காக்களையும், கிரீன் ஸ்கிரீன் கொண்ட நகரமாக உள்ளது. பொங்களூர்-க்கு இணையாக இல்லையென்றாலும் சென்னையில் அமைக்கப்படும் இந்த புதிய பசுமை பூங்கா நகரின் காற்று மாசுபாட்டைக் கட்டாயம் குறைக்கும்.

சென்னை சுற்றுசூழலுக்கு புது நுரையீரல்.. பெங்களூர் போலவே பசுமையா மாறப்போகுது..!!

இந்தியாவின் பழமையான ரேஸ் கோர்ஸ்களில் ஒன்றான மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப் அமைந்துள்ள இடம் விரைவில் மாபெரும் பசுமை பூங்காவாக மாற உள்ளது. தமிழ்நாடு அரசு, கிண்டி பகுதியில் உள்ள 118 ஏக்கர் நிலத்தில் பொதுப் பயன்பாட்டிற்கான பசுமை பூங்கா மற்றும் மக்கள் பயன்பாட்டு வசதிகளுடன் கூடிய தோட்டக்கலை பூங்கா அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 86.9 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சென்னை மாநகரத்தில் வெறும் 1.03 சதுர மீட்டர் தனிநபர் பசுமை பரப்பு (per capita green cover) மட்டுமே உள்ளது. இதை மேம்படுத்தும் விதமாக இந்த 118 ஏக்கர் நிலத்தைப் பசுமை பூங்காவாக மாற்றத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகரில் காடுகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளிகள் பூங்கா உள்ளிட்ட நகரத்தின் மொத்த பசுமை பரப்பளவை, நகரின் மொத்த பரப்பளவில் வெறும் 6.7% மட்டுமே உள்ளது, இது மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "ரேஸ் கோர்ஸ் நிலத்தின் குத்தகையை ரத்து செய்த பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பல்வேறு வசதிகள் கூடிய சிறந்த பூங்காக்களை அமைப்பதற்காக, மாநில அரசு, 4,832 கோடி ரூபாய் மதிப்புள்ள 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

"சென்னையின் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் மற்றும் பசுமை இடங்களை உருவாக்குவது அவசியமாகிவிட்டது. நகரத்தில் பெரிய அளவிலான பூங்கா உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துகிறது" என்று இந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 730 கோடி ரூபாய் கட்டண பாக்கி செலுத்தாததால், வருவாய்த் துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

1946 ஆம் ஆண்டில் அப்போதை மெட்ராஸ் நகராட்சி மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப்-ற்கு 160.86 ஏக்கர் நிலத்தை ஆண்டு கட்டணம் ரூ. 614.13 க்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. பின்னர், மம்பலம்-குண்டி தாசில்தார், மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப்-க்கு திருத்தப்பட்ட கட்டணத்தை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் வாடகையாகச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப் நிர்வாக, 1946 ஆம் ஆண்டில் செய்த ஒப்பந்தத்தில் கட்டண உயர்வு குறித்த எந்தவித திட்டவட்டமான வரைமுறை இல்லை என்று கூறியது. இந்த வாதத்தை நிராகரித்து, தமிழ்நாடு அரசு சார்பில் 2017 வரையிலான கட்டண பாக்கி ரூ. 730.85 கோடி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு எதிராக கிளப் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஆனால் நீதிமன்றம், அரசுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்து, கிளப் நிர்வாகம் பாக்கியைச் செலுத்த உத்தரவிட்டது. இதை செலுத்தாத காரணத்தால் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசு கைக்கு வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+