மதுரை: தமிழ்நாடு அரசு 2030க்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முக்கியமான இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேவேளையில் மாநிலத்தின் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை அடையச் சென்னை மட்டும் அல்லாமல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிய முதலீடுகளையும், புதிய தொழிற்பூங்காக்களையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரைக்கு புதிய முதலீடுகளும், புதிய திட்டங்களும் தமிழக அரசு அறிவிக்காமல் இருப்பதாக மதுரை மக்கள் புலம்பி வந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் முக்கியமான சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்த நிலையில் தற்போது முக்கியமான அப்டேட் மதுரை மக்களுக்கும், மதுரை தொழிற்துறையினருக்கும் வந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தபடி மதுரை அருகே உள்ள மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை - தூத்துக்குடி தொழில் வளாகத்தில், மதுரைக்கு அருகில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிப்காட் மாநிலத்தில் அடுத்தடுத்து பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து வரும் வேளையில் மேலூரில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகிய 3 முக்கிய அமைப்புகளும் தொழிற்பூங்கா, ஐடி பார்க் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்துள்ளது மதுரை மக்களுக்கு பெரிய அளவில் நன்மை அளிக்க உள்ளது.
இந்த தொழிற்பூங்கா அமையுமிடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த தொழிற்பூங்கா மூலம் மதுரை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மதுரைக்கு வருவதுடன், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
தமிழக அரசின் தொழில் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாவட்டமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications