நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய மதுரை AIIMS மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகு மார்ச் மாதம் துவங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான சாம்ராஜ்ஜியமான லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது, குறிப்பாகக் கட்டுமானத்தின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
மதுரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இறுதியாகத் தீவிரமடைந்துள்ளன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் (L&T) ரூ.1,978 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டில் இதற்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், பல்வேறு காரணங்களால் திட்டப்பணிகள் தாமதமாயின, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் அலுவல் சார்ந்த சிக்கல்களே இதற்கு முக்கிய காரணங்கள் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பின்னர், வாஸ்து பூஜை செய்து கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளன. Larsen & Toubro நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. மொத்த திட்ட பரப்பளவில் 2,31,782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

மதுரை எய்ம்ஸ் திறக்கப்பட்ட பிறகு, தென் தமிழ்நாடு மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோய், இருதய நோய் போன்ற சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை மேம்பட்ட தரத்தில் எளிதாக கிடைக்கும். மருத்துவமனை தவிர்த்து, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆய்வகங்கள், மாணவர் விடுதிகள், ஊழியர் குடியிருப்புகள் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

லார்சன் & டூப்ரோ நிறுவனம் மதுரை AIIMS கட்டுமானத்தை சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்த புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் (வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட), ஆயுஷ் பிரிவு, கற்பித்தல் பிரிவு, 750 இருக்கைகளைக் கொண்ட அரங்கம், கான்பிரென்ஸ் அரங்கங்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி விடுதிகள், பணியாளர் பகுதி, AIIMS இயக்குநர் இல்லம், பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் என மொத்தம் 42 கட்டிடம் இந்த மாபெரும் திட்டத்தில் இடம்பெறவுள்ளன.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது. AIIMS மதுரை மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications