தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரைக்கு முதலீட்டாளர் மாநாட்டில் எவ்விதமான முதலீடும் கிடைக்கவில்லை என மதுரை மக்கள் புலம்பியதை மறக்க முடியாது. இந்த நிலையில் மதுரை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல பணிகள் நடந்து வரும் வேளையில் அடுத்தடுத்து ஐடி நிறுவனங்கள் மதுரையில் அலுவலகத்தைத் திறந்து வருகிறது.
இதன் படி தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனமான சோஹோ மதுரை கப்பலூர் பகுதியில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்த அலுவலகத்தின் போட்டோ தான் இப்போது இணைய வாசிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பூட்ஸ்டார்ப் முறையில் ஒரு படியாக வளர்ந்து இன்று மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் உடன் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது ZOHO.
சோஹோ நினைத்தால் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உயரமான கட்டிடத்தில் தனது அலுவலகத்தை அமைக்க முடியும், ஆனால் ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் 2ஆம் தர நகரங்களில் அலுவலகத்தைத் துவங்கி தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்பைக் கொடுத்து அதன் மூலம் தானும் தன் மக்களும் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியான முடிவை எடுத்தவர் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
கடந்த 3 வருடமாகத் தான் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2ஆம் தர நகரங்களுக்குச் சென்று வருகிறது, ஆனால் ஸ்ரீதர் வேம்பு கொரோனா தொற்று துவங்கும் போதே தனது சிஇஓ அலுவலகத்தைத் தான் பிறந்து வளர்ந்த தென்காசி மாவட்டத்திற்கு மாற்றினார்.
அதன் பின்பு தென்காசி மத்தளம் பாறையில் புதிய அலுவலகத்தையும், திருநெல்வேலியில் R&D அலுவலகத்தையும், ஒரு இயற்கை சூழ்நிலையில் பாடம் கற்பிக்கப்படும் பள்ளி, பண்ணை, தோட்டம் ஆகியவற்றை அமைத்தார். இதன் மூலம் ஸ்ரீதர் வேம்பு தான் நினைத்ததை சாதித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் தென்காசியில் ஸ்ரீதர் வேம்பு ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் எளிமையான வாழ்க்கையை மட்டும் அல்லாமல் இயற்கையோடு நெருங்கி வாழ்ந்து வருகிறார். பல நேரம் செருப்பு கூட இல்லாமல் நடக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளார் ZOHO சிஇஓ மற்றும் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு.
கடந்த வருடம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி கோவிந்தபெரி கிராமத்தில் அமைந்திருக்கும் ZOHO நிறுவனத்தின் கிராம பள்ளி, விவசாய பகுதிகளைக் காண சென்றார். அப்போது இவரை நேரில் சென்று வரவேற்ற ஸ்ரீதர் வேம்பு அனைத்து இடத்திற்கும் அவருடைய சொந்த எலக்ட்ரிக் ஆட்டோவில், கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை ஸ்ரீதர் வேம்பு ஓட்டி அழைத்துச் சென்றார்.
ZOHO சிறு நகரங்களில் மட்டும் அல்லாமல் தனது சென்னை தலைமை அலுவலகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 வருடத்திற்கு மேலாக Estancia IT Park-ல் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் எந்தொரு ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் செய்யாத வகையில் அலுவலகம் மொத்தமும் ஐரோப்பிய ஸ்டைலில் கட்டப்பட்டு வருகிறது.


இப்புதிய அலுவலகத்தைப் பார்க்க அலுவலகம் போல் இல்லை, ஒரு மாளிகை அல்லது ஒரு ஆடம்பர ஆப்பார்ட்மென்ட் கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த Estancia IT Parkல் இருக்கும் Zoho நிறுவனத்தின் தலைமையகம் ஏற்கனவே சிறப்பான வடிவத்தில் இருப்பதால், சென்னை கட்டிடங்களின் முக்கிய அடையாளமாக இருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications