வீட்டு வாசலில் உணவு டெலிவரி செய்யப்படுமானால், ஏன் தரமான மருத்துவ வசதிகள் வீட்டு வாசலில் கொடுக்க முடியாது? இந்த கேள்வி கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அதிகப்படியான சவால்கள் உள்ளது. ஆனால் இதை அனைத்தையும் டாக்டர் சி.சுவாமிநாதன் உடைத்து எறிந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சி.சுவாமிநாதன் மதுரையில் 'Doctor on Wheels' என்ற பெயரில் நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியை எடுத்தார்.

கனடாவில் பிறந்து வளர்ந்த சுவாமிநாதன் மருத்துவத்தில் மேற்படிப்புக்காக இந்தியா வந்தார். 2015 ஆம் ஆண்டில், தனது எம்பிபிஎஸ் மற்றும் அவசர மருத்துவ பிரிவில் முதுகலை முடித்த பிறகு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் ஆலோசகராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆனால் டாக்டர் சி.சுவாமிநாதன் அவர்களுக்கு கார்ப்பரேட் வேலை தனக்கானது இல்லை என்பதை உணர்ந்ததாகவும், தான் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க விரும்பியதாகவும் பிரபல பத்திரிக்கை உடனான பேட்டியில் தெரிவித்தார்.
டாக்டர் சி.சுவாமிநாதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய போது பலரிடம் பேசும் போது, அவர்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நோயாளிகளை வீட்டில் இருந்து மருத்துவமனை படுக்கைக்கு மாற்றுவதில் அதிகப்படியான பிரச்சனை இருப்பது தான்.
இதில் இருந்து உருவான ஐடியா தான் Doctor on Wheels, முதலில் டாக்டர் சி.சுவாமிநாதன் மாருதி ஈகோ கார்-ஐ ஆம்புலென்ஸ் ஆக மாற்றி பல்வேறு சேவைகளை அதற்குள்ளேயே கொண்டு வந்தார். இந்த சேவை வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவும், அதேபோல் மருத்துவமனை செலவும் பெரிய அளவில் குறைக்க முடியும் என டாக்டர் சி.சுவாமிநாதன் நம்பினார்.
இந்த சேவை அறிமுகம் செய்த கடந்த 3 வருடத்தில் 25000 நோயாளிகளுக்கு தேவை அளிக்கிறது இந்த வாகனம், ஒரு நாளுக்கு குறைந்தது 25 அழைப்புகள் வருகிறது, தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கிறது.


Click it and Unblock the Notifications