மதுரை மக்கள் கடந்த சில மாதங்களாக எவ்விதமான முதலீடுகளும், வளர்ச்சி திட்டங்களும் வரவில்லை எனக் கவலை தெரிவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து முக்கியமான அறிவிப்பு வெளியாகி மதுரை மக்களை மனம் குளிர வைத்துள்ளது.
இதன் துவக்கப்புள்ளியாகத் தமிழ்நாட்டின் பட்ஜெட் அமைந்தது முக்கியமான விஷயமாக உள்ளது.

டைடல் பார்க்: தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி மற்றும் டெக் துறையில் கூடுதல் முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.4 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தைப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
AIIMS மருத்துவமனை: இதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, மதுரையில் AIIMS கட்டுமான பணிகளை லார்சன் & டூப்ரோ நிறுவனம் தொடங்கியுள்ளது, மதுரை மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தென் தமிழ்நாட்டுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
மதுரை AIIMS கட்டுமானத்தைச் சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்தப் புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் உடன் கல்லூரி, விடுதிகள், அலுவலகம் எனச் சகல வசதிகளும் கொண்டு இருக்கும்.
ஜப்பான் நிதியுதவி: ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது.
திருப்பரங்குன்றம்: இந்த இரு முக்கிய அறிவிப்புகளைத் தாண்டி கடந்த 2 நாட்களில் முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் முதலாவதாகத் திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்குத் தமிழக அரசு டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 2வது பதிப்பான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மற்றும் தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் 18 மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மதுரையும், தஞ்சாவூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இரண்டுமே கோவில் நகரம் என்பது கூடுதல் சிறப்பு.
மதுரை மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு CITIIS 2.0 திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விரிவாக்கம்: தீக்கதிர் பாலம் மற்றும் சமயநல்லூர் சந்திப்பு இடையே இருக்கும் 8 கி.மீ. நீளம் கொண்ட வடக்கு ஆற்றங்கரை சாலையைச் சுமார் 176 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்புப் பிரச்சனை: இதன் மூலம் மதுரை மீது இருந்த நீண்ட கால உள்கட்டமைப்பு சேவை பிரச்சனைகள் மெல்ல மெல்ல சீரடைந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஓரிரு வருடத்தில் மதுரை முக்கிய முதலீட்டுத் தளமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பஸ் அறிமுகம்: இதேபோல் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டத்தை மேம்பட்ட முறையில் இணைக்க வேண்டும் என்பதற்காக 50 புதிய மப்சல் பஸ் மற்றும் டவுன் பஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விமான நிலையம்: மேலும் மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்ற நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் வேளையில், இந்த முக்கியமான வளர்ச்சியில் இதுவும் நடந்துவிட்டால் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு புதிய பவர் கிடைக்கும்.
More From GoodReturns

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications