மதுரை: தமிழ்நாட்டில் முருங்கை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மதுரையில் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச முருங்கை பொருட்கள் சந்தையில் தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த முருங்கை ஏற்றுமதி மையத்தை நிறுவியிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் தேவைப்படக்கூடிய 80 சதவீத முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை உள்ளிட்டவை இந்தியாவிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் முருங்கை பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தமிழ் நாடு தான். 2023 -24 ஆம் நிதியாண்டின் தரவுகளின் படி தமிழ்நாடு ஒரு ஆண்டில் 20 ,741 ஹெக்டர் பரப்பளவுக்கு முருங்கை மரங்களை கொண்டுள்ளது, இதன் மூலம் ஓராண்டுக்கு 8, 41,087 டன்கள் முருங்கைகாய் மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.
சர்வதேச அளவில் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை பவுடர் உள்ளிட்டவற்றுக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதால் தமிழ்நாடு அரசு மதுரையில் முருங்கை ஏற்றுமதிக்கான சிறப்பு மையத்தை நிறுவி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான முருங்கை ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 1000 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்படுகிறது. இதில் முருங்கை இலை பவுடருக்கான சந்தை மட்டுமே 600 கோடி ரூபாய் மதிப்புக்கு உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு 11 ,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கை இலை சாகுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது 35 ஏற்றுமதி நிறுவனங்கள் 600இல் இருந்து 800 ஏக்கர் பரப்பளவுக்கு முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு 720 டன்கள் முருங்கை இலை பவுடரை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இவற்றின் மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும். இந்த பிரிவில் தமிழ்நாடு இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு முருங்கை சாகுபடி மற்றும் அவற்றை அவற்றை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை துவங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் TNAPEx நிறுவனம் தமிழ்நாட்டில் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் அதனை எப்படி மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம், அதற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளும் ஏற்றுமதி தொழிலில் ஆர்வம் இருப்பவர்களும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என TNAPEx அறிவித்துள்ளது. புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் இதற்கு முயற்சி செய்யலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications