மதுரை மாவட்டம் என்று சொல்லும் போதே மல்லிகை பூக்கள் தான் நினைவிற்கு வரும். கோவில்கள், மல்லிகை பூக்கள் போன்ற சில விஷயங்களுக்கு அப்பால் பொங்கல் பண்டிகையையோட்டி நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டும் இங்கு பிரபலம். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை காண மக்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தும் மதுரைக்கு வரத் தொடங்கினர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து மதுரை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் நிரம்பி
வழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை மாவட்டத்தின் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். பொதுவாக கூட்டம் கூடும் இடங்களில் ஆங்காங்கே உள்ள வணிகர்கள் பயனடைவார்கள். அந்த வகையில் மதுரையில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அங்கு உள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தது.

புதன் கிழமை அன்று இந்த விளையாட்டு பாலமேட்டில் நடைபெற்றது. பிறகு வியாழக்கிழமை அன்று அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டைக் காண வருகை தந்தனர். அதோடு 900-த்திற்கும் மேற்பட்ட காளைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன. இதில் 500 வீரர்கள் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு கிமு 400-100 ஆண்டுகளுக்கு முந்தைய விளையாட்டாகும். அப்போது இந்தியாவில் ஆயர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விளையாட்டை விளையாடினர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் உள்ள ஜல்லி என்பது வெள்ளி மற்றும் தங்க நகை, நாணயங்களை குறிக்கிறது. கட்டு என்பது கட்டப்பட்ட ஒரு விஷயத்தை குறிக்கிறது. ஆக இரண்டு சொற்களில் இருந்தும் உருவானது தான் இந்த ஜல்லிக்கட்டு. காளை கூட்டத்தின் மத்தியில் அவிழ்த்து விடப்படுகிறது. அதை யார் அடக்கினாலும் அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நாணயங்கள் வெள்ளி காசுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காங்கேயம் இனத்தைச் சேர்ந்த மாடுகள் பயன்படுத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒரு உணர்ச்சி பூர்வமான விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஆதரவாளர்களும் உள்ளனர். அதே சமயத்தில் இந்த விளையாட்டை எதிர்ப்பவர்களும் உள்ளனர். இந்த விளையாட்டை நடத்துவதற்காக சில பிரச்சனைகளும் அவ்வப்போது எழும்.
இந்த மாதம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் மதுரைக்கு வருவார்கள் என்று நம்புகிறோம். இந்த எண்ணிக்கை இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் வாய்ப்புள்ளது என்று மாரியாட் மதுரை கோர்ட்யார்ட் பொது மேலாளர் ஜே.பி. மேனன் கூறியுள்ளார். மேலும் மதுரையில் காளைகளுக்கு பயிற்சி வழங்கி காட்சிப்படுத்துவதன் மூலம் ஜல்லிக்கட்டை ஆண்டு முழுவதும் இருக்கும் ஒரு விளையாட்டாக மாற்ற விரும்புவதாகவும், இந்த முயற்சியை ஊக்குவிக்க டிராவல் கிளப் மதுரை மற்றும் சிஐஐ இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications