மேலூர், மதுரை: மதுரை மாவட்ட மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த மேலூர் சிப்காட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார்.
TN Rising என்ற பெயரில் தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களிலும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி, ஓசூர், கோயம்புத்தூர் தொடர்ந்து மதுரையில் இன்றைய தினம் தமிழ்நாடு வளர்கிறது முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

278 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழில் பூங்கா என்பது அமைய இருக்கிறது. இங்கே தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகள், என்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி, பேக்கேஜிங் ஆலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. plug-and-play facilities என்ற முறையில் நவீன உள்கட்டமைப்புகள் கொண்டதாக இந்த சிப்காட் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் மதுரை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருக உள்ளன. மதுரை மாவட்டம் தொழில் ரீதியாக வளர்ச்சி அடையும் என்பது மட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகப் போகிறது. சிப்காட் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில் காலணி தயாரிக்ககூடிய Pen Hai என்ற நிறுவனம் தோல் அல்லாத காலணி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலூர் சிப்காட்டில் 800 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் இந்த நிறுவனம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆலை அமைக்கப்பட்டால் 15 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு மதுரையை தொழில் மையப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மேலூர் சிப்காட் தொழிற்பூங்கா தொடர்ந்து எல்காட், ஐடி பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்கள் மற்றும் டைடல் பூங்காக்களை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
அனைத்து மாவட்டங்களும் தொழில் உற்பத்தி மையமாகவும் ஐடி வேலை வாய்ப்புகளை தரக்கூடிய மாவட்டங்களாகவும் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூரில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. முன்னதாக இங்கே சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications