சென்னை: மதுரை மக்களும், மதுரை ஐடி துறையினரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இன்ப செய்தி வெளியாகியுள்ளது. மதுரையில் அமையவுள்ள டைடல் பார்க்கின் அதிகாரப்பூர்வ கட்டிடத்தின் புகைப்படம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகருக்கு அருகில் இருக்கும் கருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் நியோ டைடல் பார்க் (TIDEL Neo Park) கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாக வெளியான புகைப்படும் இணையத்தில் வைரலாகியிருந்த நிலையில், தற்போது மதுரை டைடல் பார்க் இணையத்தை ஆட்சி செய்து வருகிறது.

மதுரையில் அமைக்கப்படும் டைடல் பார்க் மொத்தம் 12 மாடிகளைக் கொண்ட மிக பிரமாண்டமான கட்டிடமாக இந்த உருவாக உள்ளது. மொத்த கட்டமைப்பு பரப்பளவு 6,40,000 சதுர அடி இருக்கும். மாட்டுத்தாவணியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது.
மதுரை மக்கள் தங்கள் பகுதியில் புதிய முதலீடுகள் வருவதில்லை என புலம்பி வந்த நிலையில், கோயம்புத்தூர்-க்கு இணையாக மதுரையை ஐடி நகரமாக மாற்றும் இலக்குடன் அடுத்தடுத்து பல ஐடி துறை சார்ந்த கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் உச்சமாக தற்போது மதுரையில் அமைக்கப்படும் புதிய டைடல் பார்க் உள்ளது.
முதற்கட்ட தகவல்கள் அடிப்படையில் மதுரை டைடல் ஐடி பார்க் B+G+12 மாடிகள் கொண்டு அமையப்பட உள்ளது. டைடல் பார்க்-ன் படி 50000 முதல் 1 லட்சம் சதுரடி கொண்ட ஐடி பார்க் நியோ டைடல் பார்க், மதுரை டைடல் பார்க்-ன் கட்டமைப்பு பரப்பளவு மட்டும் 6.4 லட்சம் சதுர அடி.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் டைடல் அமைப்பு மாட்டுத்தாவணியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் IGBC சான்றிதழ் பெற்ற அலுவலக வளாகமாக (Indian Green Building Council) கட்டப்பட உள்ளது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசால் அறிவிக்கப்படவில்லை.
https://x.com/haldilal/status/1796431815311577329
மதுரை டைடல் பார்க் சுமார் ரூ.340 கோடி முதலீட்டில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட உள்ளது, இதன் கட்டுமானத்தை 2026குள் முடித்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான திட்டத்தை Tata Consultancy Engineering நிறுவனம் கட்டுவதாக டிவிட்டரில் கூறப்பட்டு உள்ளது.
மதுரை டைடல் பார்க்-ன் கட்டிடக்கலை ஆலோசகரா Edifice CPL நிறுவனம் செயல்பட உள்ளது, மேலும் இதன் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள டைடல் பார்க் போல், மதுரையிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சிறந்த கட்டமைப்பை வழங்கும் இந்த டைடல் பார்க், மதுரையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்க சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மதுரையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், மதுரை நகரின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.
மதுரையில் திறமையான இளைஞர்கள் எக்கசகமாக இருந்தாலும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் அனைவரும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் டைடல் பார்க் அமையவுள்ளதால், இனி இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் புதிய முதலீடுகளும் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications