மதுரை மாநகராட்சி வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க் திட்டத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட 5.6 ஏக்கர் நிலத்திற்கு கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு மொத்தம் 9.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு டைடல் பார்க்கின் விரிவாக்கத்திற்கு பெரிய அளவில் வழிவகுக்கும்.
சமீபத்தில் திறக்கப்பட்ட தஞ்சாவூர் டைடல் பார்க் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அனைத்து அலுவலகங்களும் புக் செய்யப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்ட பணிகள் துவங்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது மதுரையில் கட்டுமான பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே கூடுதலான இடம் ஒதுக்கப்பட்டு 2ஆம் கட்ட பணிகளுக்கு வித்திடப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் இதயமாகத் திகழும் மதுரையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கான ஒரு புதிய அத்தியாயம் விரைவில் இந்த டைடல் பார்க் மூலம் தொடங்க உள்ளது. நீண்டகாலமாக மதுரை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டைடல் பார்க் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பே கட்டுமானத்திற்கான டென்டர் விடப்பட்டது.
மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக உள்ளது. 12 மாடிகள் கொண்ட இந்த கட்டிடமானது, மொத்தம் 5,34,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இது மதுரையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டைடல் பார்க் திட்டம் மதுரை மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது. மதுரையை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய மையமாக மாற்றும் இத்திட்டம், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நகரின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தையும் உயர்த்த வழிவகை செய்யும்.
இந்த திட்டத்தின் மூலம் மதுரை மாநகரம் தனது புவியியல் அமைப்பைத் தாண்டி, இந்தியாவின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உயரவும் வாய்ப்புகள் உள்ளது. இது மதுரையின் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த ஊரிலேயே ஐடி துறையில் வேலைவாய்ப்புகளை பெறும் வாய்ப்பை வழங்கும். மேலும், இது சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும்.
மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16.09.2022 அன்று மதுரையில் நடைபெற்ற "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" மாநாட்டில் கலந்து கொண்டு டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மதுரை மாநகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக டைடல் பார்க் அமைக்க உத்தேசித்து முதற்கட்டமாக ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில் ஐந்து ஏக்கரில் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், இத்திட்டத்தின்படி மேலும் ஐந்து ஏக்கரில் டைடல் பார்க் பணிகள் இரட்டிப்பாக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் TIDEL PARK ரூ.600 கோடி செலவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள 5.60 ஏக்கர் நிலத்தை Phase-1 திட்டத்தில் செயல்படுதுவதற்கு தீர்மானம் முன்மொழிந்துள்ளனர்.
தற்போது TIDEL PARK நிறுவனத்தினரிடம் இருந்து 30.07.2024 அன்று வந்த கடிதத்தில் ஏற்கனவே மாநகராட்சி மூலம் மாமன்ற தீர்மானம் மூலம் ஒப்புதல் வழங்கியுள்ள 5.60 ஏக்கர் பரப்பளவு இடத்துடன் இந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள 400 ஏக்கர் பரப்பளவு இடத்தினை கூடுதலாக வழங்கிடவும் மொத்தம் 9.60 ஏக்கர் பரப்பளவில் TIDEL PARK நிறுவ தேவையான ஒப்புதலை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்த பரிந்துரைக்கு கூட்டத்தின் முடிவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications