மதுரை: தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கான ஒரு புதிய அத்தியாயம் விரைவில் தொடங்க உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை டைடல் பார்க்கின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க, இதன் கட்டுமான ஒப்பந்தம் பெற விண்ணப்பித்துள்ளவர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பார்க், 12 மாடிகளை கொண்ட ஒரு பிரமாண்டமான கட்டிடமாக இருக்கும். மொத்த கட்டமைப்பு பரப்பளவு 5,34,000 சதுர அடியாக இருக்கும். இது மதுரையில் ஏற்கனவே பல டெக் பார்க்குகள் சிறிதும் பெரிதுமாக இருந்தாலும், இது ஒரு முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையின் புதிய அடையாளமாக மாறப்போகும் இந்த டைடல் பார்க் திட்டத்தைக் கட்டி முடிக்க BNR இன்பராஸ்டக்சர், URC கன்ஸ்டிரக்ஷன், கேபசைட் கன்ஸ்டிரக்ஷன், கேபிசி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மதுரை மக்கள் நீண்ட காலமாகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒரு முக்கியமான இடமாக மாற வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த நிலையில், இந்த டைடல் பார்க்கின் மூலம் அந்த கனவு நனவாக உள்ளது. இந்த திட்டம் மதுரையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நகரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மதுரை டைடல் பார்க் 12 மாடிகள் மற்றும் 5,34,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கட்டிடமாக, மதுரையின் பிராதான பகுதியான மாட்டுத்தாவணியில் 5 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது, IGBC சான்றிதழ் பெற்ற பசுமை கட்டிடமாகக் கட்டப்படும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு இருக்கும். கட்டுமான திட்டத்தில் எந்தெந்த தளத்தில் என்ன சேவைகள் வர வேண்டும் என்ற முக்கிய விபரங்களும் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.340 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

தற்போது ஏல நடைமுறை வேகமாக முடிந்தால் இந்த வருட இறுதிக்குள் கட்டிமுடிக்கப்பட்டு, 2026-க்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை டைடல் பார்க் திட்டத்தின் மூலம் மதுரையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மதுரை மக்கள் தங்கள் பகுதியில் புதிய முதலீடுகள் வருவதில்லை என புலம்பி வந்த நிலையில், கோயம்புத்தூர்-க்கு இணையாக மதுரையை ஐடி நகரமாக மாற்றும் இலக்குடன் அடுத்தடுத்து பல ஐடி துறை சார்ந்த கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் உச்சமாக தற்போது மதுரையில் அமைக்கப்படும் புதிய டைடல் பார்க் உள்ளது.
மதுரையில் திறமையான இளைஞர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் அனைவரும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications