பொதுவாக பல்வேறு மாவட்ட இளைஞர்களும் படிப்பை முடித்த பின் வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வர வேண்டி இருக்கிறது. அந்த நிலைமையை மாற்றி சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது.
தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தியை பெருக்குவதற்கு தொழில் பூங்காக்களையும், ஐடி சார்ந்த வேலைகளை கொண்டு வருவதற்காக டைடல் பூங்காக்களையும் மற்றும் மினி டைடல் பூங்காக்களையும் அமைத்து வருகிறது . இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என அழைக்கப்படக்கூடிய மதுரையில் டைடல் பூங்காவை கட்டமைத்து வருகிறது . ஐடி வேலைகளுக்காக இந்த டைடல் பூங்கா எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு மதுரை இளைஞர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
மதுரை மாவட்ட இளைஞர்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று டைடல் பூங்கா. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் 5.34 லட்சம் சதுர அடியில் 12 தளங்களோடு இந்த டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு தரைத்தளம் கட்டி முடிக்கப்பட்ட அடுத்த அடுத்த பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தற்போது கட்டுமான பணி எந்த நிலையில் உள்ளது என்ற விவரங்களை அவர் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் டைடல் பார்க் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன, 2026 ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து முழுமையாக தயாராகிவிடும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 5.34 லட்சம் சதுர அடியில் 12 மாடி கொண்ட கட்டிடமாக இது கட்டப்பட்டு வருகிறது என்றும் தற்போது வரை 20% பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ இந்த டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகே 314 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன .இந்த ஐடி பூங்கா மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது மதுரையின் முக்கிய ஐடி மையமாக மாறும்.
மதுரை மாவட்ட இளைஞர்கள் இனி ஐடி வேலைக்காக சென்னை, பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை, வரும் ஜூன் மாதம் முதல் மதுரையிலேயே நல்ல சம்பளத்துடன் வேலைகிடைக்க போகிறது.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications