இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல முக்கிய வளர்ச்சி திட்டங்களும், நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது சோகமான விஷயமாக உள்ளது.
2023-24க்கான திருத்தப்பட்ட அளவான 44,907 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2024-25ல், 49,279 கோடி ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் மின்சாரப் பிரிவான TANGEDCO-வின் கூடுதல் செலவுகளைத் தமிழ்நாடு அரசு ஈடுசெய்து வருவது தான், இந்த நிலைக்கு முக்கியமான காரணமாகும்.

இந்த நிலையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளது என வேகமாக ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
மதுரைக்கு கிடைத்த முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
தமிழ்நாட்டில் இணைய வசதி மேம்படுத்தும் நோக்கில் அரசு 5 மாவட்டத்தில் சுமார் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது, இதில் மதுரை மாவட்டமும் உள்ளது.
மதுரை மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் மெட்ரோ ரெயில் திட்டங்கள், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளது. இதில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டமும் உள்ளது.
மதுரையில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்ய
சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் 3 தோழி விடுதிகள் அமைக்கப்படும். மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். மதுரையில் ரூ.345 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
திருச்சி - முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். திருச்சியில் ரூ.350 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
தூத்துக்குடி - முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் - நிதி அமை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.2000 கோடி மதிப்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications