மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. முக.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் தரமான ஐடி நிறுவனம் வரப்போகுது..!!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் அடுத்தடுத்து முதலீட்டு அறிவிப்புகள் வெளியாகி வரும் வேளையில் நீண்ட காலமாக மதுரை மக்கள், அரசு தங்கள் மாவட்டத்தை கண்டுகொள்வது இல்லை என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்தடுத்து முதலீடுகளையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும் கொண்டு வருகிறது தமிழக அரசு.

இந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான அமெரிக்கப் பயணத்தில் மதுரையில் அமெரிக்க ஐடி நிறுவனம் ஒன்றைக் கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. முக.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் தரமான ஐடி நிறுவனம் வரப்போகுது..!!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணுவியல் தொழில் வளர்ச்சிக் கழகம் (ELCOT) அமைத்துள்ளது மதுரை எல்காட் வடபழஞ்சி பகுதியில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட "இன்ஃபினக்ஸ்" என்ற ஐடி நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கத் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், மதுரை எல்காட் வடபழஞ்சி பகுதியில் உலகளாவிய டெக்னாலஜி மற்றும் டெலிவரி சென்டர் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு, 700 பேருக்கு பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை. இந்த புதிய டெக்னாலஜி மற்றும் டெலிவரி சென்டர், உலகளாவிய அளவில் IT சேவைகளை வழங்கும். இதன் மூலம், மதுரை சுற்றி தொழில்நுட்பத் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும்.

இந்த மையம் அமைக்கப்படும் எல்காட் வடபழஞ்சி பகுதி, மதுரை நகரில் முக்கிய தொழில்நுட்ப மையமாக உள்ளது, , பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த பகுதியில் அமைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மதுரையில் ஏற்கனவே இருக்கும் வலுவான தொழில்நுட்ப அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு, மதுரை எல்காட் வடபழஞ்சி கிராமத்தில் சுமார் 245.17 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.66.51 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் (IT SEZ) நிறுவியுள்ளது . இதில், 213 ஏக்கர் நிலப்பரப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 137.62 ஏக்கர் நிலப்பரப்பு பல்வேறு ஐடி நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில முன்னணி நிறுவனங்கள்: HCL, ChainSys Software Export Pvt.Ltd., Pinnacle Infotech Solutions, Jobin and Jismi IT Services LLP, Sashma Global Private Limited, Osiz Technologies Private Limited, Access Healthcare Service Private Limited,

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், இது மதுரையில் உள்ள திறமையான மனிதவளத்தைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள உதவும். இதன் மூலம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+