பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். டொனால்ட் டிரம்பின் பிரபலமான தோஷமான "மேக் அமெரிக்கா கிரேட் அகைன் (MAGA)" என்ற கருத்திலிருந்து ஈர்க்கப்பட்டு "மேக் இந்தியா கிரேட் அகைன் (MIGA)" என்ற தனது புதிய முழக்கத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி அமெரிக்கா மக்கள் MAGA பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.அதேபோல இந்திய மக்களும் விக்சித் பாரத் 2047-ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
அமெரிக்க மொழியில் கூறும் போது மேக் இந்தியா கிரேட் அகைன் திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் MAGA மற்றும் இந்தியாவின் MIGA இணைந்து ஒரு மெகா கூட்டணியாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்பின் சந்திப்பில் நாட்டின் பொருளாதார நிலை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இரு நாட்டு தலைவர்களும் 2030-ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி 500 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளராக இருந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளின் வர்த்தகம் 129.2 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியின் முக்கியத்துவம் குறித்தும் டிரம்ப் எடுத்துரைத்தார். இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை செய்யும் முன்னணி நாடாக அமெரிக்கா உள்ளது. இது தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தத்தையும் போட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்குமான எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இந்தியாவிற்கு சிறந்த சப்ளையராக அமெரிக்கா மாறும் என்றும் தெரிவித்தார்.
அதோடு இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு அதிக அளவில் ஆயுதங்களையும் விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான F35 போர் விமானங்களையும் வழங்கவுள்ளது. இந்த வகை விமானங்கள் ரேடாரில் சிக்காமல் மறைந்து கொண்டு தாக்கும் திறன் கொண்டவை. இந்த அறிவிப்பு இந்தியாவின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு பெரிய வர்த்தக வழித்தடத்தை அமைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது உலக வணிகத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முக்கியமான திட்டமாகும். இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால், 2 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மிகவும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறும்.
இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல், இத்தாலி மற்றும் அங்கிருந்து அமெரிக்கா வரை செல்லும் வழித்தடமாகும். இந்த வழித்தடம் குறித்து பேசிய டொனால்டு ட்ரம்ப், இதனை வரலாற்றிலேயே மிகச்சிறந்த வர்த்தக பாதைகளில் ஒன்று என்று விவரித்தார். நரேந்திர மோடியின் இந்த பயணம் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதோடு, இரண்டு நாடுகளையும் சர்வதேச அரங்கில் ஒவ்வொருக்கொருவர் ஆதரவுடன் ஒத்துழைப்புடனும் செயல்பட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications