சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு அவர்களின் பொறுப்புக்கு அங்கீகாரம் அளிக்கும், வகையில் தமிழக அரசு சார்பாக மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் புதிதாக ரேசன் அட்டை வாங்கிய இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கும் கூடிய விரைவில் 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்க வழி வகை செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ரேசன் அட்டை அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கிற்கே 1000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

எனவே நீங்கள் இதுவரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யாமல் இருந்தாலோ, புதிதாக ரேசன் அட்டை பெற்றவராக இருந்தாலோ பின் வரும் தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து மாதம் தோறும் 1000 ரூபாய் உதவி தொகை பெறலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த திட்டத்தின் இணையதள பக்கத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பத் தலைவிகளின் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.
1. உரிமை தொகை பெற விண்ணப்பம் செய்யும் குடும்ப அட்டையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் ஓராண்டுக்கான மொத்த வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் மொத்த வருமானமும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்களால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
2. ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
3. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்யும் குடும்பம் ஒரு ஆண்டில் வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் 3600 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
மேலும், மத்திய , மாநில அரசு ஊழியர்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியாது.
சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இதில் விண்ணப்பம் செய்ய தகுதியற்றவர்கள். ஏற்கனவே சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications