சென்னை: தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மாதந்தோறும் 15 ஆம் தேதி அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
குடும்ப தலைவிகளை பொறுத்தவரை இந்த 1000 ரூபாய் உரிமை தொகை அவர்களுக்கு பல வகையிலும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருக்கும் பயனாளிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க அரசு மிகப்பெரிய நிதி சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறினார். மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

அமைச்சரின் இந்த பேச்சால் ஜனவரி மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வருமா என்ற அச்சம் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை தகுதி வாய்ந்த பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வர இருப்பதால் வழக்கமாக பணம் வரவு வைக்கப்படும் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த மாதம் பெண்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டு விடும் என்கின்றனர். எனவே மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் இந்த பொங்கலுக்கு உரிமை தொகை மட்டும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகையான 1000 ரூபாயையும் சேர்த்து 2000 ரூபாயை பெற உள்ளனர்.
கடந்த முறை 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
கடந்த முறை பொங்கலின் போது 15ஆம் தேதி பண்டிகை என்பதால் வழக்கமாக பணம் போடப்படும் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த முறையும் அதே பின்பற்றப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications